டேவிஸ் கோப்பையில் யுகி பாம்ப்ரி பங்கேற்பது சந்தேகம்

0
25

டே​விஸ் கோப்பை டென்​னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்​தியா – கொரியா அணி​கள் வரும் 19-ம் தேதி மோத உள்​ளன. இந்த ஆட்​டம் சியோல் நகரில் நடை​பெற உள்​ளது.

இந்​தத் தொடரில் கலந்​து​கொள்​வதற்​காக இந்திய அணி​யின் ஒரு குழு​வினர் நேற்று முன்​தினம் சியோல் புறப்​பட்​டுச் சென்​றனர். இதில் இரட்​டையர் பிரிவு வீர​ரான யுகி பாம்ப்ரி பயணிக்​க​வில்​லை.

அமெரிக்க ஓபன் பிர​தான சுற்​றுக்கு முன்​ன​தாக பயிற்​சி​யில் ஈடு​பட்ட போது யுகி பாம்ப்​ரிக்கு வலது காலில் தசைபிடிப்பு ஏற்​பட்​டது. இந்த காயத்​தில் இருந்து இன்​னும் குணமடை​யாத​தால் யுகி பாம்ப்​ரி, டேவிஸ் கோப்​பை​யில் கலந்​து​கொள்​வாரா என்​பது சந்​தேக​மாகி உள்​ளது.

இதற்​கிடையே மாற்று ஏற்​பா​டாக அனிருத் சந்​திரசேகரை இந்​திய அணி​யுடன் இணை​யு​மாறு அகில இந்​திய டென்​னிஸ் சங்​கம் அறி​வுறுத்​தி உள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here