தமிழகத்தில் 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார்.
அப்போது, தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதால், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறிஇருந்தார்.
இந்த மனுவை உச்ச...
மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தவில்லை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
admin - 0
‘மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தின்போது காவல் துறை தாக்குதல் நடத்தவில்லை’ என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான நேற்றைய விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் எம்.சின்னதுரை பேசும்போது, “மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. குறிப்பாக இந்த அமைப்பின்...
சென்னையில் கடற்கரை - தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் புறநகர் ரயில் சேவை கடந்த 1930-களில் தொடங்கியது. வணிக ரீதியாக சென்னையை இணைக்கும் நோக்கில் இந்த ரயில் சேவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டது.
தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் தடம், கடற்கரை...
சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு மையத்துக்கு கொண்டு செல்லுதல்,...
கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினருக்கு ரூ.7,379 கோடி பணப் பலன்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
admin - 0
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் பணிக் காலத்தில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய காலத்தில் பணப் பயன்களை வழங்க முடியாத சூழல் கரோனா காலத்துக்கு முன்பாகவே இருந்தது.
நிதி நெருக்கடியால் அந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், இந்த ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாகபணப் பலன்களை வழங்கி வந்தார்.
அதன்...
தெருக்களுக்கு திருச்சி லோகநாதன், ‘சீர்காழி’, எம்எஸ்வி பெயர்: பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்
admin - 0
பின்னணி பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்கள் வசித்த தெருக்களுக்கு சூட்டி, அதன் பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழம்பெரும் பின்னணிப் பாடகரும், தமிழக அரசின் கலைமாமணி விருதும், அண்ணாவால் இசைத்தென்றல் பட்டம் பெற்றவரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பாடியவருமான திருச்சி லோகநாதனின் கலைச்சேவையை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்துவந்த மந்தைவெளிப்பாக்கம்...
மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் வரும் பிப். 20 முதல் ஏப்ரல் 5 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்து கழகம் தற்போது ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்...
தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர துணை நிற்க வேண்டும்: ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் இளைஞர்களுக்கு முதல்வர் அழைப்பு
admin - 0
தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர இளைஞர்கள் துணை நிற்க வேண்டும். அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல திட்டங்கள் வரிசை கட்ட இருக்கின்றன என்று ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், விளையாட்டு வீரர்களுக்கான 3...
மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை
admin - 0
மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வைத்திறனை வழங்கி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
மும்பையை சேர்ந்த 44 வயதான மகப்பேறியல் பெண் மருத்துவர் ஒருவருக்கு, கடுமையான கண் அழுத்த நோய் (குளுக்கோமா) மற்றும் தவறாகப் பொருத்தப்பட்ட செயற்கை லென்ஸ் காரணமாக 2 கண்களிலும் பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது.
ஏற்கெனவே பல இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காத நிலையில், அந்த மருத்துவர் சென்னை...
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான பார்த்திபன், சென்னையில் மின்சாதனப் பழுது நீக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு முதுகெலும்பைப் பிளப்பது போன்ற தாங்க முடியாத வலியும், கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், இதயத்திலிருந்து உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருந்தமனி வெடித்திருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், சுமார் 1.5 லிட்டர் ரத்தம் கசிந்து நுரையீரல் மற்றும்...









