தமிழக அரசையும், அமைச்சர்களையும் மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: 2019-ல் மக்களவைத் தேர்தல்நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை அடிக்கல் நாட்டிய அளவிலேயே அந்ததிட்டம் உள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர நிதி கேட்டால், கடன் கேட்டுள்ளோம் என்கின்றனர்.
பாஜக ஆட்சியில்...
ஒப்புகைச் சீட்டை எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: பிப்.23-ல் விசிக ஆர்ப்பாட்டம்
admin - 0
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டையும் எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்.23-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை....
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பலமுனை...
கச்சத் தீவு திருவிழாவைப் புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.எல்லை தாண்டி மீன்பிடித்த தாக, பிப்ரவரி 3-ம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இந்த வழக்கு விசாரணை, இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி கஜ நிதி பாலன், 20 மீனவர்களை விடுதலை செய்தும், 2-வது முறையாக...
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ள டி.ஆர்.பாலுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்பதால் தலைமை என்ன முடிவெடுக்குமோ என திமுகவினர் குழப்பமடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு போட்டியிட்டு வெற்றிபெற்று ௭ம்.பி. ஆனார்.திமுக பொருளாளராகவும் அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவராகவும் உள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலுவுக்கு 86 வயதாகிறது. எனவே,...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை; 3 மாதங்களில் 6,500 கடைகளுக்கு ‘சீல்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
admin - 0
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாமைசென்னை நந்தனத்தில் நடத்தின.இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் இளைஞர்கள் நல விழா சென்னை கோட்டூர்புரம்...
‘மக்களுடன் முதல்வர்’ திட்ட விழா | 1,598 பேருக்கு பணி நியமன ஆணை: நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
admin - 0
மக்களுடன் முதல்வர’ திட்டத்தின்கீழ், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில்,1,598 பேருக்கு அரசுப் பணி நியமனஆணைகள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அலுவலர்களைத் தேடிச்சென்று மக்கள் மனுக்களை தந்து குறைகளைக் தெரிவித்து, தீர்வு காண்பது என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி அதிகாரிகள் சென்றுகுறை கேட்டுத் தீர்த்து வைக்க விரும்பினார்.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது...
‘மத்திய அரசிடம் நிதி பெற இணைந்து குரல் கொடுங்கள்’ – பேரவையில் பழனிசாமிக்கு முதல்வர் அழைப்பு
admin - 0
உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசிடம் நிதி பெறஎங்களுடன் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதில் அளித்தார். சென்னை மெட்ரோ...
பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட காக்கி சீருடை அணியும் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு...
வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க அன்புமணி வலியுறுத்தல்
admin - 0
சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை...










