Google search engine
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால், தமிழகத்தில் இன்றுமுதல் 13-ம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து,...
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மக்களுக்கு நல்ல செய்தி வரும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் நேற்று ஒரு தனி தீர்மானம்...
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.279.50 கோடியில் புதிய திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சியில் ரூ.279.50 கோடியில் 493 புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற 17 திட்டங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அனைவரையும் வரவேற்றார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று தொடக்கவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி...
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீத்துக்கும் மேற்பட்டோர், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பேருந்து டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, அறைகள்...
மாமல்​லபுரத்தை அடுத்த சூலேரிக்​காடு, பட்டிபுலம் பகுதி​களில் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​தமான நிலத்​தில் உள்ள ஆக்கிரமிப்பு​களை, நீதி​மன்ற உத்தர​வின் பேரில் அகற்ற முயன்ற அறநிலையத் துறை அதிகாரி​களை, அப்பகு​திவாசிகள் தடுத்து நிறுத்​தி​ய​தால் பரபரப்பு ஏற்பட்​டது. செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரம் பகுதி​யில் இருந்து கோவளம் பகுதிவரை ஈசிஆர் சாலை​யையொட்டி ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​தமாக 1,050 ஏக்கர் நிலங்கள் பல்வேறு பகுதி​களில் அமைந்​துள்ளன. இந்நிலங்கள் பல இடங்​களில் ஆக்கிரமிக்​கப்​பட்​டுள்ளன. இதனால், அறக்​கட்​டளைக்கு சொந்​தமான நிலங்​களில்...
தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை தரக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீது வரும் டிச.16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜி்ட்டல்...
சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 85 லட்சம் நிதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சம் நிதயுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல்வரின் ஆணையின்படி, 2023-ம் ஆண்டு ரூ. 85 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வரும் 12 முதல் 19-ம் தேதி வரை...
இருட்டை விமர்​சித்​துக் கொண்​டிருப்​ப​தை​விட, ஒரு மெழுகு​வத்​தியை ஏற்றிவைப்பது சிறந்த செயல் என்பர். அப்படிப்​பட்ட ஒரு செயலைத்​தான் சென்னை, மயிலாப்​பூர் ஃபைன் ஆர்ட்​ஸில் கடந்த ஞாயிறன்று, உலக கர்னாடக இசைக் கலைஞர்​களின் கூட்​டமைப்பு முன்னெடுத்​தது. டிசம்பர் மாதத்​தில் எண்ணற்ற சபாக்​களால் நடத்​தப்​படும் ஆயிரக்​கணக்கான மார்கழி இசை, நாட்டிய திரு​விழாக்​களின் சிறப்​புக்காக இந்தியா​வின் கலாச்சார தலைநகராக சென்னை மாநகரம் கொண்​டாடப்​பட்​டாலும், சபாக்​களில் ரசிகர்​களின் கூட்டம் குறைந்​து​கொண்டே வருகிறது. கர்னாடக இசை உலகுக்கு புதிய ரசிகர்களை...
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து, சென்னை நந்தனத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் (பபாசி) சங்கத்தின் தலைவர் எஸ்.சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 48-வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி...
அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என நடிகை கஸ்தூரி ஆவேசமாக தெரிவித்தார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கர்களுக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று எழும்பூர் காவல் நிலையம் வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம்...