மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி கிருஷ்ணகுமாருடன் நெருக்கமான பந்தத்தை கொண்டுள்ளதால் மரபை மீறி அவருக்கு வாழ்த்து கூறுவதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர்.
ஸ்ரீராம் பேசும்போது, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த 8 ஆண்டு காலத்தில்...
கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு நடவடிக்கைகள், இயக்கக காரணங்களுக்காக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தலா 14 மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு காலை 6.52, 7.33, 8.43, 9.40, முற்பகல் 11.30,11.41, 12.30,...
சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரதம் தவிர இதர போராட்டங்கள் நடத்தலாம்: உயர் நீதிமன்றம்
admin - 0
சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர பிற போராட்டங்களை வரும் 30-ம் தேதி நடத்திக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை நிறுவனமான எஸ்எச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த...
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில்களை திறந்து வைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
admin - 0
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் மலர், காய், கனி அங்காடிகள் தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறிப்பாக காய்கறி சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தையில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரை நுழைவு வாயில்கள்...
ராமேசுவரத்தில் ஒரேநாளில் 41 செ.மீ. மழை: 25, 26-ல் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
admin - 0
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அம்மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேசுவரத்தில் 41 செமீ, தங்கச்சிமடத்தில் 32 செமீ மண்டபத்தில் 26 செமீ, பாம்பனில் 23 செமீ மழை பதிவானது. மாலை 5.30 மணி நிலவரப்படி பாம்பனில் 27 செமீ மழை பதிவானது....
அரும்பாக்கம் விநாயகர் கோயில் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு நடவடிக்கை – மாநகராட்சி உறுதி
admin - 0
அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் குடியிருப்பு கட்டிடத்தை ஒட்டி சாலையில் பாலவிநாயகர் கோயில் நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்குகள் நல ஆர்வலர், நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்கள், அசைவ உணவை உண்டுவிட்டு, எலும்புகளை விநாயகர் கோயிலில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.
எனவே, நாய்களுக்கு இப்பகுதியில் உணவளிப்பதை தவிர்க்குமாறு பக்தர்கள் சார்பில் விலங்குகள் நல ஆர்வலரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் கோயில் சாலையை...
விசிக தலைவர் திருமாவளவன் முகநூலில் பேசியது: கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. ஒருங்கிணைப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட அனைவரும் கட்டாயம் களத்தில் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு சார்பு அணுகுமுறையை கடைபிடிக்கக்கூடாது.
மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, மாநில பொறுப்புகள், துணை நிலை அமைப்புகளின் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற வேண்டும். பட்டியலினத்தவர் அல்லாதவர், பெண்கள், சிறுபான்மையினர், மாணவர்கள், இளைஞர்கள் தரப்பினர் விண்ணப்பிக்காமல் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகிகளுக்கு தக்க அறிவுறுத்தல்...
ஜனவரி மாதம் முதல் 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர்...
கூடைப்பந்து வீராங்கனை எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணமில்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
admin - 0
கூடைப்பந்து வீராங்கனை எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் சாப்பிட்டது காரணமில்லை என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின் டென்னிஸ் என்பவரின் மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கச் சென்ற அவர், ரயிலில்...
அதிமுக சார்பில் நவ.24-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கட்சியினர் அனைவருக்கும் பொதுச்செயலாளர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு அனைத்து வகைகளிலும் சேவை ஆற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எம்ஜிஆரால் `அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா தலைமையிலும், தொடர்ந்து நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களாகிய...










