வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்: மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
admin - 0
மருத்துவக் கல்லூரிகளில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
சென்னை - சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர்கள் த.மோகன்குமார், சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது,...
தமிழ்ப் பல்கலை.யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசாரணை குழு: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
admin - 0
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 13-வது துணைவேந்தராக வி.திருவள்ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக்காலம் டிச. 12-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநரால் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பாஸ்கரன் இருந்தபோது, பேராசிரியர்,...
மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 9,269 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,355 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 107.91 அடியில் இருந்து 108.32 அடியாகவும், நீர் இருப்பு 75.47 டிஎம்சியில் இருந்து 76.04 டிஎம்சியாகவும் உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 19-ம்...
கோயில் பணத்தை சூறையாடி வரும் இந்து சமய அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் ஆவேசம்
admin - 0
இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறையாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பொன்.மாணிக்கவேல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. கோயில் கணக்குகளை தணிக்கை...
ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாக மாறிய ஆயிரம் குடும்பங்கள்: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
admin - 0
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, டிடிவி.தினகரன் என ஆயிரம் குடும்பங்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள்தான் சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோர். ஆனால், அவர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள்...
திருச்செந்தூர் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகளுக்கு வனத்துறை அனுமதி இல்லை: அமைச்சர் பொன்முடி தகவல்
admin - 0
திருச்செந்தூர் கோயிலின் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்துறை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக...
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு அரசு அனுமதி தரவில்லை: தமிழக இயற்கை வளங்கள் துறை விளக்கம்
admin - 0
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தை சேர்ந்தது இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம். இந்த நிறுவனம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு,...
லண்டனில் படிப்பை முடித்துவிட்டு தமிழகம் திரும்பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்திட்டங்களை வகுத்திருப்பதாகவும், குறிப்பாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை மேற்கொள்ள ஆக.28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை முடித்துவிட்டு, நவ.28-ல் சென்னை திரும்புகிறார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க...
சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி: ரூ.58 கோடியில் பணிகளை தொடங்கிய மாநகராட்சி
admin - 0
சென்னை மாநகராட்சி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகு, மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பில், பராமரிப்பின்றி இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், 16-வது வார்டில் இடம்பெற்றுள்ள 135 ஏக்கர்...
தொழிலாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்
admin - 0
தொழிலாளர் நலத்துறையின், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயரமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஹூண்டாய் நிறுவனத்தில் நேற்று நடை பெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘‘இந்தியாவில் உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்த...










