ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்பில் பள்ளி மாணவர்களின் பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், பைகள், சான்றிதழ்கள் ஆகியவை சேதம் அடைந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் களத்தில் ஆய்வு செய்து அதுதொடர்பான புள்ளி விவரங்களை பள்ளி கல்வித்துறை வசம் ஒப்படைத்தனர்.அதில் கடலூர் மாவட்டத்தில்...
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்த காவல் துறைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது. இது...
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்துதல், வங்கி சேமிப்பு கணக்கை தொடங்குதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிவகைகள், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள் போன்ற நிதி சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிதிசார் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. நிதிசார் கல்வியானது மகளிர்...
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக மூன்று பேருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளது.
நவம்பர் மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மாதத்துக்கான 13 வெற்றியாளர்களை கணினி குலுக்கல்...
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-வது குருமகா சந்நிதானத்துக்கு நேற்று 12-ம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறையில் பழமைவாய்ந்த சைவ திருமடங்களுள் ஒன்றான, திருவாவடுதுறை ஆதீன திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 23-வது குருமகா சந்நிதானமாக திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தோன்றிய ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1983 முதல் 2012-ம் ஆண்டு வரை ஞானபீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து வந்தார். இவர்,...
தமிழகத்தில் சீசன் முடிந்த பிறகும் காற்றாலைகளில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், அனல் மின் உற்பத்தியை மின்வாரியம் குறைத்துள்ளது.
தமிழகத்தில் 9,150 மெகாவாட் திறனில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்வதுடன், சொந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். இந்த காலத்தில் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8...
திருவண்ணாமலையில் மண் சரிவால் 7 பேர் உயிரிழந்த மகா தீப மலையில் புவியியல், சுரங்கத் துறை வல்லுநர் குழுவினர் ஆய்வு
admin - 0
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட மகா தீப மலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுநர் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தீபத்தைத் தரிசனம் செய்ய பக்தர்கள் மலையேறும் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், கார்த்திகை தீபத் திருவிழாவின்போது...
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,601 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,691 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பைவிட நீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று...
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்து மத்திய அமைச்சர் பரிசீலனை: அண்ணாமலை தகவல்
admin - 0
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்து மத்திய அமைச்சர் பரிசீலனை செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுரை மாவட்டத்தில் மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அண்ணாமலையில் இந்த ட்வீட் கவனம்...
வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை டிச.12-ல் ஸ்டாலின் திறக்கிறார்
admin - 0
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகம், நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திறந்து வைக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து...










