முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி விவகாரம்: தமிழக – கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
admin - 0
பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் 2 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. கேரளாவின் வல்லக்கடவு வன சோதனைச் சாவடியில் இந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கடந்த 3 நாட்களாக லாரிகள் அங்கேயே...
பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும்: அண்ணாமலை
admin - 0
பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோரை மர்ம கும்பல் கொலை செய்து, 8 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:...
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகம் வந்த மத்திய குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ் சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வீடுகள், விவசாய நிலங்கள்...
உலக கர்னாடக இசை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், கர்னாடக இசையை ரசிக்கும் பள்ளி மாணவர்களை அடையாளம் காணும் திட்டத்தின் தொடக்க விழா மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நாளை நடைபெற உள்ளது.
இதுகுறித்து கர்னாடக இசை கலைஞர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிராந்திய செயலாளர் நித்ய மகாதேவன் கூறியதாவது: கரோனா பேரிடருக்கு பிறகு, கர்னாடக இசை மீதான ஆர்வம் ரசிகர்களிடம் குறைந்துள்ளதை உணரமுடிகிறது. குறிப்பாக, இசை கச்சேரிகளை பார்ப்பதில் இளம் தலைமுறையினருக்கு ஆர்வம்...
அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைப்பவர்களின் மதவெறி, சாதி வெறி எண்ணம் இந்த பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்றுள்ள மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது, இந்த ஸ்டாலின் இருக்கும்வரை உங்களால் அதை நிறைவேற்றவும் முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை குடிநீர் வாரியம சார்பில், தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு 213...
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளையும், வாழ்நிலையையும் உயர்த்துவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் தொழிலாளர் நலத் துறையும், தொழிலாளர் நல அமைச்சகமும் ஏற்படுத்தப்பட்டன.
தொழிலாளர்களுக்கான...
இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், குளங்களைச் சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை அறநிலையத் துறை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 1,300 ஆண்டுகள் தொன்மையானது. இந்தக் கோயிலுக்கு இறுதியாக எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றே அறியப்படாத நிலையில்,...
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை: தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானியிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலை கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை....
பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வசூலில் புதிய மைல்கல்: அந்த...
மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகருக்கு பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர், கழிவுநீர் கலந்து நிறம் மாறி இருந்ததாகவும், இதை அருந்திய அப்பகுதி மக்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது....










