Google search engine
பணிநிரந்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில்...
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதேவேளையில் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுது. இந்நிலையில்,...
நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது. அப்படி வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்யக் கோரி முன்மொழியப்பட்ட தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: சுரங்கம் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை 2023- திருத்தச் சட்டம் அதே ஆண்டு மார்ச் 17 முதல்...
கல்வி நிறுவனங்கள், குழுமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் உட்பட 10 சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உள்ளாட்சி...
கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் விசிகவுக்கும் தவெகவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவுடனான கூட்டணியில் விசிக இருந்துவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு,...
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால், தமிழகத்தில் இன்றுமுதல் 13-ம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து,...
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மக்களுக்கு நல்ல செய்தி வரும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் நேற்று ஒரு தனி தீர்மானம்...
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.279.50 கோடியில் புதிய திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சியில் ரூ.279.50 கோடியில் 493 புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற 17 திட்டங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அனைவரையும் வரவேற்றார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று தொடக்கவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி...
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீத்துக்கும் மேற்பட்டோர், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பேருந்து டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, அறைகள்...
மாமல்​லபுரத்தை அடுத்த சூலேரிக்​காடு, பட்டிபுலம் பகுதி​களில் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​தமான நிலத்​தில் உள்ள ஆக்கிரமிப்பு​களை, நீதி​மன்ற உத்தர​வின் பேரில் அகற்ற முயன்ற அறநிலையத் துறை அதிகாரி​களை, அப்பகு​திவாசிகள் தடுத்து நிறுத்​தி​ய​தால் பரபரப்பு ஏற்பட்​டது. செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரம் பகுதி​யில் இருந்து கோவளம் பகுதிவரை ஈசிஆர் சாலை​யையொட்டி ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​தமாக 1,050 ஏக்கர் நிலங்கள் பல்வேறு பகுதி​களில் அமைந்​துள்ளன. இந்நிலங்கள் பல இடங்​களில் ஆக்கிரமிக்​கப்​பட்​டுள்ளன. இதனால், அறக்​கட்​டளைக்கு சொந்​தமான நிலங்​களில்...