Google search engine
இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் அமைப்பு சாரா நல வாரியத்தில் அதிக அளவில் பதிவு செய்யும்படி, தொழிலாளர் துறை செயலர் வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் ஆணையரகத்தில் நேற்று தொழிலாளர் நலத் துறை செயலர் கொ.வீரராகவராவ் தலைமையில், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் முன்னிலையில், துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய துறையின் செயலர் வீரராகவராவ், ``தொழிலாளர் துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ்...
நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் அந்த நிலத்துக்கு சட்டரீதியாக உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகளுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு, பாலவாக்கம் திருவள்ளுவர் நகரில் 24 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இந்நிலையில், இதில் 4.47 ஏக்கர் நிலத்தை 250 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டி நீண்டகாலமாக குடியிருந்து வருகின்றனர். இந்த...
மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. துறையின் ஆணையர் ஆர்.லால்வேனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், ஜெபராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. நல்வழி கூறவேண்டும்: இதில்,...
அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட் வகைகள் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம். இவற்றின் விற்பனையை மேம்படுத்த, சென்னையில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்கள், விற்பனை நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தயிரில் புரதம் அதிகமாக இருக்கும். குழந்தைகள், வயதானவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள்...
தமிழ்​நாடு நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரியம் சார்​பில் சென்னை பட்டினப்​பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்​டத்​தில் 6.20 ஹெக்​டேர் பரப்​பள​வில் 1356 அடுக்​கு​மாடி குடி​யிருப்புகள் கட்டப்​பட்டன. அங்கு தரை மற்றும் முதல் தளம், தரை மற்றும் 3 தளம், தரை மற்றும் 4 தளம் என 3 வகையாக குடி​யிருப்புகள் கட்டப்​பட்​டுள்ளன. இந்த கட்டிடங்கள் கட்டப்​பட்டு 60 ஆண்டுகள் ஆகும் நிலை​யில் தற்போது சிதலமடைந்த நிலையில் உள்ளன....
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 7 புறப்பாடு, 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கொச்சி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.50 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ்...
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா, கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி,...
தமிழகத்தில் வரும் ஆண்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீராதாரத்தை மேம்படுத்த தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அணை கட்ட முடியாத நிலையில் தடுப்பணை கட்டுவதன்...
இந்து சமய அறநிலையத் துறை​யில் நடத்​தப்​பட்ட தணிக்கைக்கு, அந்த துறை ஒத்துழைப்பு வழங்​க​வில்லை என்று தணிக்கைத் துறை அறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்பாக தமிழ்​நாடு மாநில முதன்மை கணக்​காயர்கள் ஜெய்​சங்கர் (தணிக்கை-1), ஆனந்த் (தணிக்கை-2) ஆகியோர் சென்னை​யில் செய்தியாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் சூரியசக்​தி​யுடன் கூடிய பசுமை வீடு திட்​டத்​தின் கீழ் தேர்வு செய்​யப்​பட்ட கிராமங்​களைச் சேர்ந்த ஊரக நலிவுற்​றோரில் 7.42 சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்​திருப்​ப​தால், பாதிப்புற்ற ஊரக...
பாரதியாரின் பிறந்தநாள் விழா கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் நாளை (டிச.11) கொண்டாடப்பட உள்ளது. இதனுடன் தேசிய மொழிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கான தலைப்பாக ‘வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்’...