கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு...
“என்னை அதானி சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை” – சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது என்ன?
admin - 0
‘அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை' என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது.
ஜி.கே.மணி (பாமக): அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடம் இருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதில் முறை கேடு நடந்துள்ளதாக தமிழகத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது....
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்
admin - 0
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா (93) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய அரசியலில் உறுதியும் தொலைநோக்கும் மிகுந்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கர்நாடகத்தின் முதல்வராக கிருஷ்ணா, அம்மாநிலத்தைக் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிப் பாதையில் செலுத்தினார்....
தமிழகத்தில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கனிமவளம் கொண்ட நிலங்களும், அரசியல் சாசனத்தின் 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள்...
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்: இபிஎஸ்
admin - 0
முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசும்போது, “முல்லை பெரியார் அணையில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியார் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு...
பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்: சென்னையில் 3,500-க்கும் மேற்பட்டோர் கைது
admin - 0
பணிநிரந்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில்...
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்; புயலுக்கு வாய்ப்பில்லை: பிரதீப் ஜான் கணிப்பு
admin - 0
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதேவேளையில் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுது. இந்நிலையில்,...
“விளக்கம் கேட்கக்கூடாது என்றால் என்ன நியாயம்?” – முதல்வர் – இபிஎஸ் இடையே நடந்த காரசார விவாதம்!
admin - 0
நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது. அப்படி வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்யக் கோரி முன்மொழியப்பட்ட தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: சுரங்கம் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை 2023- திருத்தச் சட்டம் அதே ஆண்டு மார்ச் 17 முதல்...
கல்வி நிறுவனம், குழுமங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி: சட்டத்திருத்த மசோதா அறிமுகம்
admin - 0
கல்வி நிறுவனங்கள், குழுமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் உட்பட 10 சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உள்ளாட்சி...
கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் விசிகவுக்கும் தவெகவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவுடனான கூட்டணியில் விசிக இருந்துவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு,...










