போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வுக்கு ரூ. 3028 கோடி நிதி தேவைப்படும்
admin - 0
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028 கோடி தேவைப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு வழங்க தேவையான தொகை குறித்து கணக்கீடு செய்யப்பட்டது....
சென்னை - மைசூரு இடையிலான அதிவேக விரைவு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, வரும் ஜன.3-ம் தேதி முதல் சாதாரண விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - மைசூரு அதிவிரைவு ரயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. 497 கி.மீ. தூரத்தை 9 மணி...
சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி: அன்புமணி, தினகரன் குற்றச்சாட்டு
admin - 0
சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி என்று பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
அன்புமணி: காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் 18-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ.11 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆவின் நிறுவனம்,...
இயற்கை சீற்றங்களில் இருந்து கோயில்களை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே அதிகமான கோயில்களை கொண்டுள்ளது தமிழகம்தான். சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், நமது பாரம்பரியத்தை நிலைநாட்டவும், ஆயிரக்கணக்கான கோயில்கள், நமது முன்னோர்களால் கட்டப்பட்டது.
ஆனால், தற்போது கோயில்களை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முன்கூட்டியே திட்டங்களை...
அண்ணாநகர் டவர் பூங்காவில் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலை: பத்திரமாக மீட்ட பெற்றோர்
admin - 0
அண்ணா நகர் டவர் பூங்காவின் கம்பிகளுக்கு இடையே சிக்கிய சிறுமியின் தலையை பெற்றோரே பத்திரமாக மீட்டனர். அண்ணா நகரில் உள்ள டவர் பூங்காவின் மையத்தில் 135 அடி உயரத்தில், சுமார் 12 அடுக்குகள் கொண்ட கோபுரம் உள்ளது.
இந்த கோபுரத்தில் இருந்தவாறு நகரின் அழகை ரசிக்கலாம். இதற்காக அடுக்குகள் தோறும் கம்பிகள் போடப்பட்டுள்ளது. அதன் வழியாக கண்டு களிக்கலாம். தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் வார...
வாழும்போதே கலைஞர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் – மியூசிக் அகாடமி 98-வது இசை விழாவில் ஒடிசா ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி
admin - 0
சென்னை மியூசிக் அகாடமியின் 98-வது இசை விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.
மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, ‘தி இந்து’ குழுமம் வழங்கும் 1 லட்ச ரூபாய் பணமுடிப்புடன் கூடிய சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை அளித்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது: கலைஞர்கள்,...
விஎச்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி பதவி நீக்க அறிவிப்பில் கையெழுத்திடாதது ஏன்? – அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி
admin - 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்பிரதேசம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் நீதிபதி எந்த முறையில் கலந்து கொண்டாரா என்ற வினா எழுகிறது. சட்டவிதிகளை மீறி இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ்,...
கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை அருகேயுள்ள தருமன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (30). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா(23), மகள்கள் கீர்த்தி(5), சங்கீதா(3). கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, நேற்று முன்தினம் காலை சந்திரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவர் மீதான கோபத்தால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா, தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து...
மகளிர் நலத்திட்டங்களுக்கான குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு: சமூக நலத்துறை அரசாணை வெளியீடு
admin - 0
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களுக்கு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி சமூக நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20...
தமிழக சிறைகளில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? – ஐகோர்ட் கேள்வி
admin - 0
தமிழக சிறைகளில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஊழல் முறைகேடு குறித்தும், அதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் டிச.16-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர், சிறையில் வேலை செய்ததற்கு வழங்க வேண்டிய ஊதியத்தை 4 மாதங்களாக வழங்கவில்லை எனக்கூறி சென்னை...










