Google search engine
தெற்கு ரயில்வேயில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், எஸ்.ஆர்.எம்.யு., டி.ஆர்.இ.யு சங்கங்கள் தலா 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று, அங்கீகார தொழிற்சங்கங்களாகத் தேர்வாகியுள்ளன. ரயில்வேயில் முதல்முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு), டி.ஆர்.இ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் வெற்றி பெற்று, அங்கீகாரம் பெற்றன. இதையடுத்து, கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. வெற்றி...
‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்​மை​யானவர் பெரி​யார்’ என்று பெரி​யார் நினை​வகம் திறப்பு விழா​வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்​டி​னார். கேரள மாநிலம், கோட்​டயம் மாவட்​டம், வைக்​கத்​தில், நேற்று நடைபெற்ற வைக்கம் போராட்​டத்​தின் நூற்​றாண்டு நிறைவு விழா​வில், பெரி​யார் நினை​வகம், நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். விழாவுக்கு தலைமையேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசி​ய​தாவது: சமூக சீர்​திருத்​தவா​தி​களில் முதன்​மை​யானவர் பெரி​யார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’...
தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 82 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரிகள் இல்லை. மீதமுள்ள...
மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய...
வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றதன் நூற்றாண்டு நிறைவையொட்டி, வைக்கத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.8.50 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கேரள மாநிலம் வைக்கத்தில் கடந்த 1924-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பெரியார் பங்கேற்றதன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.8.50 கோடியில் வைக்கத்தில் உள்ள தந்தை...
சென்னையில் மழை பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் காவல்துறை சார்பில் 39 மினி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பொது மக்கள் உடனடியாக அழைத்தால் போலீஸார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து உதவுவார்கள் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர். சென்னை ஓட்டேரி, பிரிக்லின் சாலையில் தேங்கிய மழை நீர். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கிய நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக...
சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகம் 1076 கிமீ அளவில் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக உள்ளது. இப்பகுதியில் ஏராளமான புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. விதிகளை மீறியும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் மீனவ சமுதாயம் மற்றும் பிற உள்ளூர் சமுதாயங்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இவர்களை பாதுகாக்கவும், விதிமீறல்களை தடுக்கவும், புதிய திட்டங்களுக்கு உரிய...
தமிழகத்தில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்க ரூ.12.38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரால் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுத்து கொடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024-2025-ம் நிதி ஆண்டு உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின்படி மாநிலத்தில் உள்ள 11...
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவுள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாகவே நிர்வாகிகள் கொத்து கொத்தாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்பு, நாம் தமிழரில் இருந்து விலகி, தவெகவில் சேரும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கட்சி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ஒரே...