Google search engine
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதியில், மழைநீர் கால்வாய் பணியும் நடைபெறுவதால், பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில்...
பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றியை பெற்றதை குறிக்கும் ‘விஜய் திவஸ்’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுமார் 93 ஆயிரம் பேர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். போரின் விளைவாக வங்கதேசம் விடுதலை அடைந்தது. இதை குறிக்கும்...
போக்குவரத்து இடையூறை காரணம் காட்டி ‘சங்கீத ஞானமு’ ரத ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சமீபகாலமாக கர்னாடக இசையில் ஆன்மிக தெய்வீக உணர்வுகள் குறைந்து, வியாபார நோக்கம் கூடிவருவதாக ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் இசையை மீட்டெடுக்கும் வகையில், ஆன்மிக நாட்டம் உள்ள இசை கலைஞர்கள், ரசிகர்கள் "சங்கீத ஞானமு" என்ற ஒரு குழுவை அமைத்து செயல்பட்டு வருகின்றனர். அந்த குழுவுக்கு ஆன்மிக வழிகாட்டியாக...
புதிய அரசியல் பதிப்பகம் சார்பில், பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். பாமக நிறுவனர் ராமதாஸ், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன், விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புத்தகத்தின் முதல்...
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும், மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் "ஒரே நாடு; ஒரே தேர்தல்" சட்ட மசோதாவுக்கு மத்திய...
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நேற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சென்னை கிண்டியை அடுத்துள்ள மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை...
தமிழகத்​தில் நடைபெற உள்ள 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார். அதிமுக செயற்​குழு மற்றும் பொதுக்​குழு கூட்டம் சென்னை வானகரத்​தில் கட்சி​யின் அவைத் தலைவர் தமிழ்​மகன் உசேன் தலைமை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் கட்சி​யின் கணக்கு வழக்​குகளை அமைப்பு செயலாளர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார். பின்னர் கட்சி​யின் பொதுச்​செய​லாளர் பழனிசாமி பேசி​ய​தாவது: கடந்த 2016 சட்டப்​பேரவை தேர்​தலில்...
 தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (டிச.16) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும். இதன் காரணமாக நாளை (டிச.17) கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் கோயம்பேடு 100 அடி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் ஜாக்சன் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் -...
வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து சென்னை குன்றத்தூர் பகுதியில் வாட்ஸ்-அப் குழு அமைத்து சமீபத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதேபோல, ஒரு வீட்டில் பிரசவமும் நடந்தது. இதில், தாய், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதை பின்பற்றி, புதுக்கோட்டையில் அபிராமி என்பவருக்கு மாமியாரும், கணவரும் சேர்ந்து ‘யூ-டியூப்’ உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில்,...