Google search engine
தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக்.29-ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன்...
சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், ரூ.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின், லாட்டரிச் சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்ததன் மூலமாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை சுமார் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருப்பதாகவும்...
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் நாளை (17-ம் தேதி) காலை 7 முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பயணிகளின் வசதிக்காக அரைமணி முதல் ஒரு மணி நேர இடைவெளியில் காலை 6.15 மணி முதல் மாலை 4.10 வரை...
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பைக்கு விரைவு பேருந்துகள் சேவை நேற்று தொடங்கியது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு...
சாலை விபத்துகளால் ரத்த தான தேவை அதிகரித்துள்ளதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். வி.எச்.எஸ் பன்னோக்கு மருத்துவமனை ரத்த மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெ.பாலசுப்ரமணியம் நினைவுநாளையொட்டி ரத்த தானம் செய்பவர்கள் மற்றும் நன்கொடை யாளர்கள் அமைப்புகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. வி.எச்.எஸ் ரத்த மையத்தின் இயக்குநர் வி.மைதிலி தலைமை வகித்தார். மருத்துவமனை இயக்குநர் யுவராஜ் குப்தா...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்...
நாட்டில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மக்கள் சேவை, நாட்டின் பாதுகாப்பில் முன்னிலை யில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக்கின் 555-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீகுருநானக் சத்சங்க சபாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மகன் ராகுல் ரவி, தென் இந்திய பகுதிகளுக்கான தலைமை படை தலைவர் லெப்டினன்ட்...
இப்பொதெல்லாம் கட்சி தொடங்கும் முன்பே பதவிகளுக்கு ஆட்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் கட்சி தொடங்கி வருஷம் 13 ஆகியும் இன்னமும் கட்சிப் பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தான் இந்த சரித்திர சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் தேர்தலுக்குத் தேர்தல் கட்சி தாவுவோர் எண்ணிக்கை கின்னஸ் லெவல். முன்பெல்லாம் இங்கு தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் தான் இருக்கும். ஆனால், அதை உடைத்து மாநிலக் கட்சிகளும் ஆட்சியை...
ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு, விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார். தஞ்சாவூரில் `ஸ்பர்ஸ்' திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர உயிர்ச்சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்க்கவும் நேற்று சிறப்புமுகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கலந்துகொண்டார். சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமை வகித்து...
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை வீரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் டிசம்பருடன் முடிவடைகிறது. இதனால்...