Google search engine
மெரினாவில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மெரினா கடற்கரை, ஜெயலலிதா நினைவிடம் அருகில் பாஜக இளைஞரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் மோகன்,...
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, இன்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும்...
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, ஆளுநருக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக அறிவித்து ஒரே நாளில் நடைபெறும் ஒரு நாடகப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதியை வழங்கியிருப்பது எப்படி? பாமக தலைவர் அன்புமணி: அண்ணா...
முன்​னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடி​யாது என உயர் நீதி​மன்றம் தெரி​வித்​துள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறை​களில் வேலை வாங்​கித் தருவ​தாகக் கூறி பண மோசடி​யில் ஈடுபட்​டதாக அதிமுக முன்​னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதி​மன்ற நீதிபதி பி.வேல்​முருகன் நேற்று முன்​தினம் உத்தர​விட்​டிருந்​தார். இந்நிலை​யில் இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி...
அ​திமுக பொதுச் செயலாளர் பழனிசாமி​யின் உறவினர் நிறு​வனம் உட்பட தமிழகம் முழு​வதும் 26 இடங்​களில் வருமான வரி சோதனை நடைபெற்​றது. ஈரோட்டை தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர். ஈரோடு பூந்​துறை சாலை​யில் உள்ள செட்​டிபாளையம் என்ற இடத்​தில் ராமலிங்கம் என்பவருக்​குச் சொந்​தமான கட்டுமான நிறு​வனம் உள்ளது. இந்த நிறு​வனம் சார்​பில் தமிழ்​நாடு வீட்டு​வசதி வாரி​யம்,...
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் திருடுபோனதால், 5,000-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 வாரங்களாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். உத்தர பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் உள்ளது சோரா கிராமம். இங்கு 5,000 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு 250 கிலோ வாட் டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சிலர் இந்த டிரான்ஸ்பார்மரை திருடி, அதன் பாகங்களை எடைக்கு போட, தனித்தனியாக பிரித்து அருகில்...
அதிக வேலை​வாய்ப்புகளை வழங்​கு​வ​தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்​பதாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் பெரும் தொழில்​களைத் தொடங்கி, இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்புகளை உருவாக்​கும் நோக்​கில் தமிழகத்​தி​லும், வெளி​நாடு​களி​லும் தொழில் முதலீடுகளை ஈர்த்​துப், புதிய தொழிற்​சாலைகளை முதல்வர் ஸ்டா​லின் உருவாக்கி வருகிறார். அதேநேரத்​தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிக அளவில் தொடங்க ஊக்கமளிப்​பதன் வாயி​லாக, சாதாரண மக்களும் அதிக...
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால்...
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டம், போராடும் உரிமையை வழங்கியுள்ளது. யார் போராட அனுமதி கோரினாலும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை அவர்கள் ஒழுங்குபடுத்தலாம். போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு நீதி கேட்டு, அண்ணா பல்கலை. முன்பாக அதிமுக மாணவரணி சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதேபோல், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் மதுரவாயலில் அக்கட்சியினர் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், போராட்டம் நடத்திய அதிமுகவினர் 161 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸாரும், தேமுதிகவினர்...