சட்டப்பேரவையில் இருந்து நேற்று 2 முறை அதிமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பெள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேசினார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவி்த்தனர். முதல்வர் பேச்சின் போது குறுக்கிட்டு...
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு யார் காரணம்? – திமுக – அதிமுக பரஸ்பர குற்றச்சாட்டால் பேரவையில் பரபரப்பு
admin - 0
டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு யார் காரணம் என்று சட்டப்பேரவையில் அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே கடும் விவாதம் நடைபெற்றது. பரஸ்பர குற்றச்சாட்டுக்களால் பேரவையில் பரபரப்பு நிலவியது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்:
மதிமுக உறுப்பினர் மு.பூமிநாதன்: மதுரையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பலர் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர். டங்ஸ்டன் சுரங்கம் வராது என்பதை மக்களுக்கு...
சமூக வலைதளத்தில் பதிவுகளை போட்டு மக்களையும் எம்எல்ஏக்களையும் அவமானப்படுத்துவதா? – ஆளுநருக்கு அப்பாவு கண்டனம்
admin - 0
ஆளுநர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுகளைப் போட்டு தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் வந்து அதை வாசிக்காமல் சென்றார். பின்னர் அதுதொடர்பாக தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில்...
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியலை 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ), உலக வங்கி, குற்ற பதிவுகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவு ஆதாரங்களை ஒருங்கிணைத்து இந்த பட்டியல்...
அண்ணா பல்கலை. வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக உறுப்பினர் அல்ல; ஆதரவாளர் மட்டுமே – முதல்வர் ஸ்டாலின்
admin - 0
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் வேறு குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: குற்றம் நடந்த பிறகு, குற்றவாளியை கைது செய்யாவிட்டாலோ, காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள்...
ஹெச்எம்பிவி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சை இல்லை: 3 – 6 நாளில் தானாக சரியாகிவிடும் என சுகாதார அமைச்சர் விளக்கம்
admin - 0
ஹெச்எம்பிவி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சையோ, மருந்தோ இல்லை. 3 முதல் 6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஹெச்எம்பி வைரஸ் தொற்று குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது: ஹெச்எம்பி வைரஸ் தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. 2001-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் தொற்று...
நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் சகோதரர் இல.கோபாலன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். பாஜக மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் துலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ள இல.கணேசன், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், அவரது அண்ணன் இல.கோபாலன் (82) வயது மூப்புமற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
அவருக்கு மனைவி சந்திரா கோபாலன் மற்றும் மகள் உள்ளனர். இல.கோபாலன்...
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: ஆணையர் நடவடிக்கை
admin - 0
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளர் ராஜி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை காவல் ஆணையர் அருண் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை தண்ணீர் கேன் விற்பனை (சப்ளை) செய்யும் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட்டில்...
காங்கிரஸை முதன்மை கட்சியாக மாற்றுவதே இலக்கு: நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
admin - 0
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் மாநில ஐடி விங் மற்றும் வார் ரூம்திறப்பு விழா மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் பங்கேற்று திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் வலிமை பெற கிராம கமிட்டிகள்...
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு கவனம் எடுத்து அரசு செயல்படுவதை பற்றி குறிப்பிடாமல், சம்பந்தமின்றி பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பற்றி அதிகம் பேசுகிறார்.
இந்த அரசு...










