புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு முதல்வர் அறிவிப்புக்கு பிறகு நடைமுறைக்கு வர உள்ளது.
புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: ஏ.சி., வசதி இல்லாத டவுன் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5-ல் இருந்து 7...
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் 346 கி.மீ. நீளமுள்ள 114 சாலைகள், 81 சிறுபாலங்கள் சேதம்: நெடுஞ்சாலைத் துறை
admin - 0
ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 346 கி.மீ நீளமுள்ள 114 சாலைகள், 81 சிறுபாலங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்க ரூ.132.85 கோடி தேவைப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30-ம் தேதி புயல் கரையைக் கடந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் 55 செ.மீ. மழை பெய்தது. மாவட்டத்தையே புரட்டிப்போட்ட இந்த பெருமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள், சிறுபாலங்கள் சேதமடைந்தன. மேலும், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு...
நாடாளுமன்றத்தில் அதானி பற்றியும் மணிப்பூர் கலவரம் குறித்தும் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்திய கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரசார் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் அதானி குறித்தும், மணிப்பூர் கலவரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில்...
அமித் ஷா பேசியதை திரித்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
அமித் ஷா பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: அம்பேத்கர் குறித்து அமித்ஷா தவறாக பேசவில்லை. அவர் பேசியதில் ஒன்றிரண்டு வார்த்தைகளை எடுத்து விவாதிக்கின்றனர். முருகனைப் போல அம்பேத்கரையும் நான் கடவுளாகத்தான் பார்க்கிறேன். அவரது கொள்கைகளை ஏற்று நான் அரசியல் செய்கிறேன். அவரது...
பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேர்ந்தால் பத்திரிகையாளர் குடும்ப நிதி ரூ.10 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு
admin - 0
பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் குடும்ப உதவிநிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து இந்த நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால், அவர்கள் குடும்பத்துக்கு தமிழக...
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு
admin - 0
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கர் பெயரை மேலும் 100...
வரும் 2025-ம் ஆண்டு முதல் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு பொது விடுமுறை தினங்கள் தவிர, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் முழு நாள் விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு வரும் 2025-ம் ஆண்டுமுதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை...
குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பதவியில் சேர்ந்த 26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் 3 கட்டங்களாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 2ம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமும், உதவி ஆணையர்கள் (டிஎஸ்பி) தமிழக அரசால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு மூலமும், அடுத்த கட்டமாக மத்திய அரசு (யூபிஎஸ்சி தேர்வு) மூலம் ஐபிஎஸ் அதிகாரிகள்...
தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவை அகற்றும் செலவை கேரள அரசிடம் வசூலிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
admin - 0
தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல...
ஆந்திரா நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வட மாவட்டங்களில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு
admin - 0
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவும். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த...










