சென்னையில் மழை தொடர்ந்திருந்தால் திமுக அரசின் சாயம் வெளுத்திருக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
admin - 0
சென்னை: ராயபுரம் ராம்நாயக்கன் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்களே மாறி,மாறி பேசி வருகிறார்கள். மழைக் காலத்தில் யாராவது மழைநீர் வடிகால்வாய்பணிகளை மேற்கொள்வார்களா? வேளச்சேரி பாலத்தில், மக்கள் பயந்துபோய் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த ஆட்சி மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததையே இது காட்டுகிறது.
அரசைப் பொறுத்தவரை வேலைபார்ப்பது போல காட்டிக்...
சென்னையில் மழைநீர் எங்கும் நிற்காததே வெள்ளை அறிக்கை: பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
admin - 0
சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கோரியிருந்தார். "தற்போது சென்னையில் மழைநீர் தேங்காமல் உள்ளதே, அதுதான் வெள்ளை அறிக்கை" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடந்த அக்.14-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. அன்று நள்ளிரவு முதலே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் பல்வேறுஇடங்களுக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டார். அதைத்தொடர்ந்து நேற்று...
சென்னை மாநகராட்சியில் செயல்படும் 388 அம்மா உணவகங்களில் இன்றும் இலவச உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
admin - 0
சென்னை: சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 388 அம்மா உணவகங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, நேற்று வழங்கப்பட்டதுபோல், இன்றும் இலவசமாக உணவு வழங்கப்பட உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர...
மழையால் தவிக்கும் மக்களுக்கு உதவ ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ மீண்டும் அமைப்பு: பழனிசாமி அறிவிப்பு
admin - 0
சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ (Rapid ResponseTeam) மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதியில் உள்ளஅதிமுக தன்னார்வலர்களை எப்போது வேண்டுமானாலும் மக்கள் அணுகி உதவி பெறலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு மக்களைக் கைவிட்ட...
தமிழகம் முழுவதும் கனமழையால் 891 குளங்கள் நிரம்பின: 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 60 சதவீதம் நீர்இருப்பு
admin - 0
சென்னை: தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சுமார் 60 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. 38 மாவட்டங்களில் உள்ள மொத்த ஏரிகளில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. தொடங்கியது முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிரம்பியுள்ள நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர்...
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்தால் உடனடியாக அழைக்க வேண்டிய அவசர உதவி எண்ணும் தீயணைப்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் பெய்தமழையில் மாநிலம் முழுவதும் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புகட்டுப்பாட்டு அறைக்கு, பாம்புகளை பிடிக்க வேண்டும் என்றவகையில் மட்டும் 211 அழைப்புகள்...
சென்னையில் கனமழை பெய்தபோதிலும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை: ஆவின் மேலாண்மை இயக்குநர் தகவல்
admin - 0
சென்னை: கனமழை பெய்தபோதிலும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக,...
கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன் சாலைகளில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அவதி: விரைவில் தீர்வு காண கோரிக்கை
admin - 0
சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள சாலைகளில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் அண்மைக் காலமாக சிறுமழை பெய்தாலே அப்பகுதி களில் உள்ள பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கிவிடுகிறது.
வடிகால்களால் பயனில்லை: பல மணி நேரத்துக்கு பிறகேமழைநீர் வடிகிறது. இப்பகுதி களில் மழை நீர் வடிகால்கள் புதிது...
காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்தின் சிஐடியு தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சிஐடியு தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்தனர். சிஐடியு நிர்வாகிகள்...
இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதல் பன்னோக்கு கப்பல் ‘சமர்த்தக்’ – காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கடலில் செலுத்தப்பட்டது
admin - 0
சென்னை: இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது பன்னோக்கு கப்பல் ‘சமர்த்தக்’ சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து கடலில் செலுத்தப்பட்டது.
இந்திய கடற்படைக்காக எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனம் கட்டிய முதலாவது பன்னோக்கு கப்பல் இதுவாகும். இதுபோல 2 கப்பல்கள் கட்ட எல் அண்டு டி நிறுவனத்துடன் கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் இது முதலாவது கப்பலாகும். இக்கப்பலை கடற்படை மரபுகளின்படி, கடற்படை தளபதியின் மனைவியும், கடற்படை மனைவியர்...










