பசுமைவழிச்சாலை – அடையாறு சந்திப்பு வரை 2-வது சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு: அதிகாரிகள் தகவல்
admin - 0
இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு நோக்கி 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான வீடியோ வெளியான நிலையில், இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ‘போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்’ என்று கள்ளச்சாராயம் விற்பவர் தைரியமாக சொல்லும் அளவுக்கு கள்ளச்சாராய விற்பனையை...
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.லிங்கேஸ்வரன் உள்பட 4 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரான மாவட்ட நீதிபதி வி.ஆர்.லதா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், அங்கு தலைமை...
பருவகால நோய்களின் பாதிப்பு தொடர்வதால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்துகளை இருப்பில் வைக்க நடவடிக்கை
admin - 0
பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
டெங்கு, இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட தொற்றுகள் மழை மற்றும் குளிர் காலங்களிலும், வெயில் காலங்களில் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, அக்கி போன்றவைகள் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி அனைத்து கால நிலைகளிலும் எல்லா விதமான தொற்றுகளும்...
தமிழகத்தில் இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்துக்கு மாறாக கடந்த ஜனவரி 26-ம் தேதி வரை மொத்தம் 104 நாட்கள் நீடித்தது. மேலும், பல இடங்களில் அதிகனமழை பெய்தது.
அதேபோல, இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கோடையைப் போன்று கடும் வெயில் சுட்டெரித்து...
ஏப்ரல் முதல் காலி பாட்டில் திரும்பப்பெறும் திட்டம்: உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தகவல்
admin - 0
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘ஊட்டி,...
காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே...
955 அரிய உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ள கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கம்: முதல்வர் தொடங்கினார்
admin - 0
கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதலவர் மு.கருணாநிதி நடத்திய, 'தமிழிணையம் 99' மாநாட்டின் விளைவாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் தமிழ் இணையக் கல்விக்கழகம் கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தால் 39 நாடுகளில் 181 தொடர்பு மையங்கள் மூலமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
திருப்பரங்குன்றம் மலையை காக்க போராட்டம்: ஐகோர்ட் திடீர் அனுமதிக்கு பின் ஒரு மணி நேரத்தில் குவிந்த மக்கள் கூட்டம்
admin - 0
திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி கோஷமெழுப்பினர். போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுகாசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கந்தூரி...
ஓடும் பேருந்தில் ரீல்ஸ் செய்த ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் 70வி தடம் எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன், நடத்துநர் சிவசங்கர் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, நடத்துநர் ரீல்ஸ் செய்தபடி ஓட்டுநர் அருகே வந்துள்ளார்.
இதைப் பார்த்த ஓட்டுநரும் அவருடன் ரீல்ஸ் செய்தவாறே பேருந்தை ஓட்டியுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில்...










