Google search engine
கருத்து வேற்றுமைகள் மக்களுக்கு பலன் தராது. எனவே, ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசி மாநில பிரச்சினைகளுக்காக முடிவெடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரோடு பொங்கல் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொங்கல் பரிசோடு சாமானிய மக்களுக்கு பொங்கல் விழா ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்துடன் ஆரம்பித்திருக்கிறது....
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தில் கட்டியுள்ள ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் பணியாளர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் கருணை கொடை வழங்கும் திட்டத்தை, சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். 16 பேருக்கு ரூ.1,000-க்கான காசோலைகளை வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம்...
சென்னை மற்றும் புறநகர் பகுதி​ளில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்​டாடப்பட்​டது. பழைய பொருட்கள் எரிக்​கப்​பட்​ட​தால், சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் புகைமண்டலமாக காட்சி அளித்​தது. தை முதல் நாளில், தமிழர்களின் முக்​கியப் பண்டிகையான பொங்கல் இன்று (ஜன.14) கொண்டா​டப்​படு​கிறது. இதையொட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்​படை​யில் மார்​கழி​யின் கடைசி நாளான நேற்று போகி பண்டிகை கொண்​டாடப்​பட்​டது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை​யில் வீட்​டில் இருந்த தேவையற்ற...
அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து, பாஜகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற உள்ளது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன. பொங்கல் நாளில் வேட்பாளரை அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே,...
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலக தமிழர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, உலகம் முழுவதிலும்...
பொங்கல் விழா நாளை (ஜன.14-ம் தேதி) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், விடுமுறை நாளான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வட சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, அவர்களின் விருப்பத்தை கேட்டு புத்தாடைகளை வாங்கிச் சென்றனர். வடசென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்ட கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். அப்பகுதியில் உள்ள...
திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம் தொகுதி திமுக சார்பில் பொங்கல் விழா வியாசர்பாடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி மற்றும் தொண்டர்களுடன் இணைந்து...
பபாசியின் சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான 48-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற...
பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டையுடன் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நேற்று தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். விழாவுக்கு வந்த அவரை கிராம பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஆளுநருக்கு...
கடலில் பாலம் கட்டும் திட்டத்துக்கு மீனவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர் சங்க பிரதி​நி​திகள் கு.பாரதி, கோ.சு.மணி ஆகியோர் கூறிய​தாவது: கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடல் பகுதி​யில் பாலம் கட்டப் போவதாக தமிழக அரசு தெரி​வித்​துள்ளது. இப்பாலம் கட்டப்​பட்​டால் 5 ஆயிரம் மீனவர் குடும்​பங்​களின் வாழ்​வா​தாரம் பாதிக்​கப்​படும். வரும் 2050-ம் ஆண்டுக்​குள் கடல் மட்டம் உயரும் என பல்வேறு ஆய்வுகள் தெரி​வித்துள்ளன. மேலும், கடற்​கரை​யில் கட்டுமான பணிகள்...