Google search engine
பாலியல் குற்​றச்​சாட்​டால் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்ட இணை ஆணையர் மீது சம்பந்​தப்​பட்ட பெண் போலீஸ் வீடு கட்ட ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்புகார் அளித்​துள்ளதாக அவரது மனைவி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவல​கத்​தில் புகாரும் அளித்​துள்ளார். சென்னை போக்கு​வரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்கு​மார், தனக்கு பாலியல் தொந்​தரவு அளிப்​பதாக பெண் போலீஸ் ஒருவர் டிஜிபி​யிடம் புகார் அளித்​திருந்​தார். இதன்​பேரில் நடத்​தப்​பட்ட...
பட்டுக்கோட்டை தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த தேர்தலில் உதயசூரியன் வெற்றி பெற்றது. எம்எல்ஏ-வாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை அதிகாரத்துக்கு வந்தார். வராது வந்த மாமணியாய் தொகுதியில் உதயசூரியன் உதித்ததால் உடன்பிறப்புகள் உற்சாகமானார்கள். ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அனை​வரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கை கைவிட்​டதால் அண்ணாதுரை எம்எல்​ஏ-வாக பொறுப்​பேற்ற நாள் முதலே அவருக்கு எதிராக கழகத்​துக்​குள்ளேயே கலகக் குரல்கள் வெடித்தன. ஆனால், அதைப்​பற்றி...
இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல். ஒரு காலத்​தில் பாமக இதேபோல் மாவட்​டங்​களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்​த​போது அதை பரிகாசம் செய்த கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிக்​குப்...
“பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் கூட்டணிக் கட்சிகளுடனான நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.” என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தலைவர் – முதல்வர்… இப்போது “அப்பா” என்றுஅழைக்கிறார்களே? கட்சிக்காரர்கள் இயக்கத்துக்குத் தலைவரானதால், “தலைவர்” என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், “முதல்வர்” என்றும் அழைக்கிறார்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறை...
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம தொழில் துறை, அமைச்சர் பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. அதுமுதல், அவ்வப்போது அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2024 செப்டம்பரில் 5-வது முறையாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, அமைச்சராக இருந்த...
இசை வெளியீட்டு உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி இளையராஜா சாட்சியம் அளித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா போன்ற 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையை இளையராஜாவின்...
திமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவில் வந்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றுவரும் திமுக, 2026-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெறும் வகையில், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நிர்வாக...
அடையாறு ஆற்றின் கீழே 50 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணியை முடித்துக்கொண்டு இயந்திரம் வெளியே வந்தது. இதை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ....
சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி, திருக்கருக்காவூர் முல்லைவனநாத சுவாமி, வியாசர்பாடி இரவீசுவரர், கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி, கொளத்தூர் சோமநாத சுவாமி, சோமாசிபாடி பாலசுப்பிரமணிய சுவாமி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேரலிங்கம் ஆகிய 8 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவு...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அவரை அமலாக்கத்துறையும் கடந்தாண்டு ஜூன் 26-ல் கைது செய்தது. இந்த வழக்கில் அவரது சகோதரர் முகமது சலீமையும் அமலாக்கத்துறை கடந்தாண்டு ஆகஸ்டில் கைது...