Google search engine
வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்.9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஆர்எஸ்எஸ் உருவான ஆரம்ப காலத்தில் இருந்து அது சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைத்து வருவதை நாடறியும். வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபையும், மதச்சார்பற்ற பண்புகளையும் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு...
திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, மா.பொ.சி சாலையில் ஐம்பது ஆண்டுகாலமாக காமராஜர் பெயரில் இயங்கி வந்த காய்கறி மார்கெட் புதிப்பிக்கப்பட்டு தற்பொழுது திறக்கும் தருவாயில் பெருந்தலைவர் பெயரில்லாமல் திறக்கவுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவந்த "காமராஜர் மார்க்கெட் சேதம்...
“மத்திய அரசு நமது நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை நிராகரித்தாலும், அத்தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டம் ஓய்ந்து விடாமல் தொடரும். அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் ஒரு கலந்தாலோசனைக்கூட்டம் வரும் 9-ம் தேதி மாலை நடைபெறும்.” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் முதல்வர் பேசியதாவது: மருத்துவப்படிப்பில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் முன்னுரிமையும், சமவாய்ப்பையும் உருவாக்கும் நுழைவுத்தேர்வு முறையை கருணாநிதி உருவாக்கினார். சமூக நீதியை நிலைநாட்டி, கிராமபுறங்களில்...
கோவை: “புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லி சென்றார். அண்ணாமலை அவரைக் காட்டினார், இவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை. நான் போட்டியில் இல்லை,” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்த மசோதா...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருக்கொள்ளிக்காட்டில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல் அதிகாரியாக ஜோதி (வயது 40) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மன்னார்குடி ஒத்தை தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் கூடுதல் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். பொங்கு சனீஸ்வரர் கோவிலில் எழுத்தராக சசிகுமார்(50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய...
முட்டுக்காட்டில் நடைபெற்ற சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குழந்தைகளுடன் உரையாடினார். சென்னை அருகே முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அந்த நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் நச்சிகேதா ரவுட் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்...
கொங்கு மண்டலத்தின் பெரிய கவுண்டரான பழனிசாமியையும் சின்னக் கவுண்டரான அண்ணாமலையையும் வைத்து அமித் ஷா ஆடத் தொடங்கி இருக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் தான் இப்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக இருக்கிறது! தமி​ழ​கத்​தில் திமுக ஆட்​சியை அகற்​றியே தீர வேண்​டும் என்ற ஒற்​றைத் தீர்​மானத்தை கையில் எடுத்​திருக்​கும் பாஜக தலைமை அதற்​கான பொறுப்பை வழக்​கம் போல அமித் ஷாவிடம் ஒப்​படைத்​துள்​ளது. அதன்​படி, வழக்​கு​கள் மூலம் திமுக வட்​டத்தை கலங்​கடிக்​கத்...
ராமநாதபுரத்தில், மாவட்ட அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கும், மாவட்டச் செயலாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ-வுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தமானது ஆளும் கட்சியினரை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்​டத்​துக்​காரரான ராஜகண்​ணப்பன் 2021 தேர்தலுக்கு முன்புதான் மீண்டும் திமுக-வில் சேர்ந்​தார். சொந்த மாவட்​டத்தில் அவரது சாதிக்​காரரான (அமைச்சர்) கே.ஆர்​.பெரியகருப்பன் மாவட்டச் செயலாளராக இருப்​பதால் ஓர் உறைக்குள் இரண்டு கத்திகளை வைக்க விரும்​பாமல் ராஜகண்​ணப்பனை ராமநாத​புரம் மாவட்​டத்​துக்கு நகர்த்​தியது திமுக தலைமை. அதன்படி முதுகுளத்தூர் தொகுதியில் போட்டி​யிட்டு...
கச்சத்தீவு மீட்பு தொடர்பான தீர்மானத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: கச்சத்தீவு 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தாரைவார்க்கப்பட்டது. இதனால் இந்தியாவின் சர்வதேச கடல் எல்லை மிகவும் சுருங்கியது. அடிக்கடி இலங்கை கடற்படை நமது...
பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையான சொத்துகள், யாருக்கு சலுகை பொருந்தும்? என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பதிவுக் கட்டண சலுகை மகளிர் பெயரில் வாங்கும் விற்பனை ஆவணங்களுக்கு மட்டுமே பெருந்தும் என்பதால், இந்த சலுகை, சொத்தை...