Google search engine
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்​பாளர்​களை ஆதரித்து, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, நாளை​ முதல் 2 நாட்​களுக்கு சென்​னை​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். தேர்​தல் அறிவிக்​கப்​பட்ட பின்​னர் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மாவட்ட வாரி​யாக பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். சென்னை மாவட்​டத்​தில் 16 தொகு​தி​கள் உள்​ளன. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 13 இடங்​களில் அதி​முக​வும், தலா ஓர் இடத்​தில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்​சிகளும் போட்​டி​யிடு​கின்​றன. இதன் வேட்​பாளர்​களை ஆதரித்து பழனி​சாமி...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று மாலை சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு புதுச்சேரி பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட தமிழக முதல்வர் திருவெண்காட்டில் உள்ள உறவினர் இல்லத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து இன்று காலை சீர்காழி தென்பாதி...
“பாஜக எம்எல்ஏவைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பாஜக எம்எல்ஏவை தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதல்வர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட...
சென்னை மாவட்​டத்​தின் தெற்கு பகு​தி​யில் அமைந்​துள்ள தொகுதி தி.நகர் எனப்​படும் தியாக​ராய நகர் தொகு​தி. சென்னை மாநகரின் இதயப் பகு​தி​யாக​வும் முக்​கிய வணிக மைய​மாக​வும் திகழ்​கிறது தி.நகர். கோடம்​பாக்​கம், மேற்கு மாம்​பலம், அசோக் நகர், கே.கே.நகர், எம்​ஜிஆர் நகர், வட பழனி ஆகிய முக்​கிய பகு​தி​களை இத்தொகுதி உள்​ளடக்கி உள்​ளது. முதன்மை வணிக மைய​மாக​வும் அதோடு மக்​கள் நெருக்​கம் மிகுந்த குடி​யிருப்பு பகு​தி​யாக​வும் திகழ்​கிறது தி.நகர். பிர​தான​மான கடைகள், ரங்​க​நாதன் தெரு,...
தமிழக தேர்தல் களத்தில் புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், பிரச்சாரத்தில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், வலுவற்ற கீழ்மட்ட கட்டமைப்பாலும் தனித்து விடப்பட்டுள்ளதை தேர்தல் களத்தில் காண முடிகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பலர் புதுமுகங்கள். கட்சியே புதிதுதானே என்றாலும், இவர்கள் விஜய் நற்பணி மன்றத்தில் இல்லாத புதியவர்கள். பிரச்சாரம் முடிய இன்னும் முழுமையாக 2 வாரங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகள் தீவிர...
பெரம்​பூர் தொகு​தி​யில் விஜய் வெற்றி பெற்​றால், மக்​கள் பனையூருக்கு செல்ல வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்புமணி தெரி​வித்​தார். அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி இடம்​பெற்​றுள்ள பாமக சார்​பில் பெரம்​பூர் தொகு​தி​யில் வேட்​பாளர் தில​க​பா​மா, அதி​முக சார்​பில் ராயபுரம் தொகு​தி​யில் வேட்​பாளர் டி.ஜெயக்​கு​மார், துறை​முகம் தொகு​தி​யில் வேட்​பாளர் மனோ, ஆர்​.கே.நகர் தொகு​தி​யில் வேட்​பாளர் ஆர்​.எஸ்​.​ராஜேஷ், எழும்​பூர் தொகு​தி​யில் வேட்​பாளர் ஆர்​.அபிஷேக் மற்​றும் திருவிக நகர் தொகு​தி​யில் தமிழ்...
மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்டணி வெற்​றியை தொழிலா​ளர்​கள் உறுதி செய்ய வேண்​டும் என தொழிற்​சங்​கங்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளன. இதுகுறித்து எல்​பிஎஃப், எச்​எம்​எஸ், ஏஐடி​யுசி, சிஐடி​யு, ஐஎன்​டி​யுசி உள்​ளிட்ட 10 தொழிற்​சங்​கங்​கள் வெளி​யிட்ட கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய அரசை பாஜக 3-வது முறை​யாக கைப்​பற்​றியதற்கு பின்​பு, இந்​தி​யாவை தனது ஒற்​றைப் பரி​மாண இந்​துத்​துவ சர்​வா​தி​காரத்​தின் கீழ் கொண்​டு​வரும் இலக்கை நோக்கி வேக​மாக நடை​போடு​கிறது. அரசி​யல் அமைப்​புச் சட்​டம் வகுத்​தளித்த மாநிலங்​களின் ஒன்​றி​யம் என்ற கூட்​டாட்சி முறைமையை...
அம்​பத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் ஜி.​பால​முரு​கன், தொகுதி முழு​வதும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார். அவர் கையாண்டு வரும் எளிமை​யான மற்​றும் நூதன பிரச்​சார முறை​கள் அப்​பகுதி மக்​களிடையே பெரும் கவனத்தை ஈர்த்​துள்​ளன. வேட்​புமனுத் தாக்​கலை முடித்த கையோடு களத்​தில் இறங்​கி​யுள்ள பால​முரு​கன், தின​மும் காலை நேரங்​களில் தொகு​தி​யிலுள்ள முக்​கியப் பூங்​காக்​களுக்​குச் சென்று நடைப்​ப​யிற்சி மேற்​கொள்​பவர்​களிடம் கலந்​துரை​யாடு​வதை வழக்​க​மாகக் கொண்​டுள்​ளார். நேற்று தாங்​கல் பூங்​கா, புதூர் மீன்...
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் தனது பதவியை தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் ராஜினாமா செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சி 45 வது வார்டில் இருந்து மாமன்ற உறுப்பினராக கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சண். ராமநாதன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாமன்ற உறுப்பினர்களால் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மேயராக அவர் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு 2027 மார்ச் மாதம் வரை இவரது பதவிக்காலம் இருந்த நிலையில்...
பாஜக வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று வெளியிடுகிறார். அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 27 தொகுதிகளில் களம் காண்கிறது. அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை பாஜக மாற்றிக் கோருவது, ஒரே தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைத் தேர்தலில் போட்டியிட வைக்க மேலிடம் அழுத்தம் கொடுப்பது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு...