நெய் விலையில் மாற்றமில்லை: விற்பனையாளர்களுக்கான கமிஷன் குறைப்பு வாபஸ் – ஆவின் அறிவிப்பு

0
32

ஆவின் நெய் விலை உயர்த்​தப்​பட​வில்லை என அந்த நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. மேலும், மொத்த விற்​பனை​யாளர்​களுக்​கான கமிஷன் குறைப்பு உத்​தரவு வாபஸ் பெறப்​பட்​டுள்​ளது என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் பால் பொருட்​களை விற்​பனை செய்​யும் பணி​யில், தமிழக அரசின் ஆவின் நிறு​வனம் ஈடு​படு​கிறது.

ஆவின் நிறு​வனம், பால் உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்து பாலை கொள்​முதல் செய்​து, அதை பதப்​படுத்தி பல்​வேறு வகை​களில் விநி​யோகம் செய்​கிறது. இதற்​கிடை​யில், ஆவின் நெய் தொடர்​பான பில்​லிங் விலை மற்​றும் கமிஷன் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக, ஆவின் நிறு​வனம் கடந்த 14-ம் தேதி அறி​வித்​திருந்​தது.

இதுகுறித்​து, ஆவின் நிறுவன மேலாண்மை இயக்​குநர் அஜய் யாதவ் வெளி​யிட்​டிருந்த உத்​தர​வில், “ஆவினின் 500 மில்லி பெட் ஜார் நெய் மொத்த விற்​பனை​யாளர்​களுக்​கான பில்​லிங் விலை ஜிஎஸ்டி உள்பட ரூ.332.42-க்​கும், சில்​லறை விற்​பனை​யாளர்​களுக்​கான பில்​லிங் விலை ரூ.342.60-க்​கும் விற்​பனை செய்​யப்​படும். எனினும், அதி​கபட்ச சில்​லறை விலை​யான ரூ.365-ல் மாற்​றமில்​லை.

அதே​போல, ஒரு லிட்​டர் பெட் ஜார் நெய், மொத்த விற்​பனை​யாளர்​களுக்​கான பில்​லிங் விலை ரூ.650.72 ஆகவும், சில்​லறை விற்​பனை​யாளர்​களுக்​கான பில்​லிங் விலை ரூ.664.78 ஆகவும் நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது. அதே​நேரம், அதி​கபட்ச சில்​லறை விலை​யான ரூ.700-ல் மாற்​றமில்​லை.

அட்​டைப் பெட்​டி​யில் அடைத்து விற்​கப்​படும் ஒரு லிட்​டர் நெய்க்​கான மொத்த விற்​பனை​யாளர்​களுக்​கான பில்​லிங் விலை ரூ.640.72 ஆகவும், சில்​லறை விற்​பனை​யாளர்​களுக்​கான பில்​லிங் விலை ரூ.654.78 ஆகவும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், அதி​கபட்ச சில்​லறை விலை ரூ.690-ல் மாற்​றமில்​லை.

இந்த புதிய பில்​லிங் ஜூலை 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.இந்த விலைப் பட்​டியலை அனைத்து மாவட்ட பால் உற்​பத்​தி​யாளர் ஒன்​றி​யங்​களும் உடனடி​யாக அமல்​படுத்​து​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டிருந்​தது. இதற்கு தமிழக பால் முகவர்​கள் நலச்​சங்​கம் உள்பட பல்​வேறு தரப்​பினர் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

பால் முகவர்​கள் நலச்​சங்க தலை​வர் பொன்​னு​சாமி வெளி​யிட்ட அறி​விப்​பில், “பால் முகவர்​கள், சில்​லறை வணி​கர்​கள், மொத்த விநி​யோகஸ்​தர்​கள் வயிற்​றில் அடிக்​கும் வகை​யில், ஆவின் நெய் விலை உயர்வு குறித்த ஆவின் நிர்​வாக உத்​தரவை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்” என்று தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், மொத்த விற்​பனை​யாளர்​களுக்​கான கமிஷன் குறைப்பு உத்​தரவை வாபஸ் பெறு​வ​தாக ஆவின் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, ஆவின் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில், “ஆவின் நெய்க்​கான மொத்த விற்​பனை​யாளர் கமிஷன் குறைக்​கப்​பட்​டதுடன், நெய்​யின் சில்​லறை விலை​யும் உயர்த்​தப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இந்த தகவல்​கள் உண்​மைக்கு புறம்​பானவை. ஆவின் நிறு​வனத்​தின் அனைத்து வகை நெய்​களும் தற்​போதுள்ள அதே சில்​லறை விலை​யிலேயே நுகர்​வோருக்கு தொடர்ந்து விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. எந்த வகை நெய்​யின் சில்​லறை விலை​யும் உயர்த்​தப்​பட​வில்​லை.

மொத்த விற்​பனை​யாளர்​களுக்​கான கமிஷனில் மேற்​கொள்​ளப்​பட்ட திருத்​தம் திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளது. எனவே, முன்பு நடை​முறை​யில் இருந்த கமிஷன்​ அமைப்​பே தொடர்ந்​து அமலில்​ இருக்​கும்​” என தெளிவு படுத்​தப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here