Google search engine
 தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார். திருச்​சி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி என்ற கருத்து தற்​போது அதி​கள​வில் பேசப்பட்டு வரு​கிறது. மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான ஆட்சி கூட்​டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்​பாய், நரசிம்​ம​ராவ் ஆகியோர் பிரதமர்​களாக இருந்​த​போதும் கூட்​டணி ஆட்சி தான் நடந்​தது. பல மாநிலங்​களி​லும் கூட்​டணி ஆட்சி நடந்து...
தமிழகத்​துக்கு கல்வி நிதி தர மத்​திய அரசு மறுக்​கிறது என்​று, சென்​னை​யில் நடை​பெற்ற மகளிர் கல்​லூரி பட்டமளிப்பு விழா​வில், உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் குற்​றம்​சாட்​டி​னார். சென்​னை, ராணி மேரி கல்​லூரி​யின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடை​பெற்​றது. இதில் உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்​பிடம் பெற்ற 100 மாணவி​களுக்கு பதக்​கங்​கள் அணி​வித்து பட்​டங்​களை வழங்​கி​னார். மொத்​தம் 1,424 பேருக்கு பட்​டம் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது:தமிழகத்​தில்...
சென்​னை​யில் ஆக.12-ம் தேதி நடக்​க​வுள்ள கியூபா நாட்​டின் முன்​னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்​ரோ​வின் பிறந்​த​நாள் நூற்​றாண்டு விழா​வில் பங்​கேற்க வரு​மாறு முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் நேற்று அழைப்பு விடுத்​தார். அமெரிக்கா உள்​ளிட்ட நாடு​கள் கியூபா மீது நடத்தி வரும் தாக்​குதல், பொருளா​தார தடை ஆகிய​வற்றை கண்​டித்​தும், கியூ​பாவுக்கு ஆதரவு தெரி​வித்​தும் கியூபா ஆதரவு ஒரு​மைப்​பாட்​டுக்​குழு அமைக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு...
ஐந்து ஆண்​டு​கள் நன்​றாக பணி​யாற்றிய கேட் கீப்​பர்​களை இன்​டர்​லாக் செய்​யப்​ப​டாத கேட்​களில் பணி​யமர்த்த தெற்கு ரயில்வே நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. கடலூர் மாவட்​டம், ஆலப்​பாக்​கம் ரயில்வே கேட் பகு​தி​யில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாக​னம் மீது விழுப்​புரம் - மயி​லாடு​துறை பயணி​கள் ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​தைத் தொடர்ந்​து, லெவல் கிராசிங் பகு​திகளில் பாது​காப்பு அம்​சங்​களை மேம் ​படுத்​து​வது, இன்​டர்​லாக்​கிங் தொழில்நுட்​பத்​துக்கு மாற்​றப்​ப​டாத லெவல் கிராசிங்...
 நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யினர் அன்​ன​தானம் வழங்​கினர். நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி சென்னை அடை​யாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்​டபத்​தில் சிவாஜி​யின் சிலைக்கு மாலை அணிவிக்​கப்​பட்​டு, அதன் அருகே அவரது படம் அலங்கரித்து வைக்​கப்​பட்​டிருந்​தது. சிவாஜி கணேசனின் மகனும், நடிகரு​மான பிரபு,...
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி விமான நிலையத்தை வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தூத்துக்குடிக்கு வரும் பிரதமரை, பாஜகவினர் 25 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவை நெகட்டிவ் போர்ஸ் என்றும், தமிழகத்தில் பாஜக...
தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் 2021-ல் தாமரையை மலரவைத்து தனது செல்வாக்கைக் காட்டியது பாஜக. அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பாஜக புதுமுகமான டாக்டர் சரஸ்வதி தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாஜக-விடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ்...
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது... கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. 2026 சட்​டமன்​றத் தேர்​தலில் போட்​டி​யிட திட்​ட​மிடும் புதுச்​சேரி​யின் முக்​கிய அரசி​யல் கட்சி தலை​வர்​கள், தங்​களது தொகு​தி​களை தாங்​களே தேர்வு செய்​து, மக்​களுக்​கான நல உதவி​களை தாராள​மாக வாரி வழங்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். தங்​களுக்கு தேர்​தலில்...
தமிழக வெற்​றிக் கழகத்​தில் 2 கோடி உறுப்​பினர்​கள் என்ற இலக்​குடன் உறுப்​பினர் சேர்க்​கும் பணி நடை​பெற்று வருகிறது. இதற்​காக ஏற்​கெனவே, இணை​யதளம் அறி​முகம் செய்​யப்​பட்​டிருந்த நிலை​யில், தற்​போது புதிய செயலி​யும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இதைத்தொடர்ந்​து, ஜூலை 20-ம் தேதி (நேற்​று) விஜய் தலை​மை​யில் மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம் நடை​பெறும் என்​றும், அதில் உறுப்​பினர் சேர்க்கை செயலியை விஜய் அறி​முகம் செய்​வார் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், இந்த நிகழ்ச்​சிகள் திடீரென தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்​தில் குற்​றங்​களை தான் கட்​டுப்​படுத்த முடிய​வில்​லை​யென்​றால், பெருகி வரும் குப்​பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். நயி​னார் நாகேந்​திரன்: மத்​திய அரசால் வெளி​யிடப்​பட்ட தூய்மை நகரங்​கள் பட்​டியலில் தேசிய அளவி​லான நகரங்​களின் தரவரிசை​யில் சென்னை 38-வது இடத்​தை​யும், மதுரை 40-வது இடத்​தை​யும் பெற்​றிருப்​பது மிகுந்த கவலை​யை​யும், அதிர்ச்​சி​யை​யும் அளிக்​கிறது. தமிழகத்​தின் ஒரு நகரம்...