ஜார்க்கண்டில் வங்கி ஊழியரின் அலட்சியத்தால் முதியவர் உயிரிழப்பு: வங்கியின் முன்பு சடலத்துடன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்
admin - 0
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தன் லக்ரா. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள ஜார்க்கண்ட் கிராமீன் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். மேலும் அரசிடமிருந்து வரும் பென்ஷன் பணமும் அந்த வங்கிக் கணக்கிலேயே சேர்ந்து வந்தது.
இந்நிலையில் ரத்தன் லக்ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில் ரத்தன் லக்ராவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வந்துள்ளனர்....
லிப்ட் கேட்டு லாரியில் ஏறி, டிரைவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உ.பி. மாநிலம் ஹமீர்பூரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அண்மையில் லாரி டிரைவர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு ஹமீர்பூருக்குச் சென்றுள்ளார். ஹமீர்பூரில் போலீஸ் எஸ்.ஐ இறங்கிய பின்னர் லாரியிலிருந்த தனது பணம் ரூ.20 ஆயிரம் மாயமானதை டிரைவர் அறிந்தார். இதனிடையே அந்த எஸ்.ஐ. தனது வாகனத்தில் ஏறிச் சென்றார்.
இதையடுத்து போலீஸ் எஸ்.ஐ. இந்தப் பணத்தைத்...
“உங்கள் அரசின் திட்டங்களை பின்பற்றுகிறேன்” – பிரதமர் மோடி முன்னிலையில் இந்தோனேசிய அதிபர் பேச்சு
admin - 0
பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேசியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிய விருந்தளித்தார். பிரதமர் மோடி முன்னிலையில் விருந்து நிகழ்ச்சியில் பேசிய...
கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகளே காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி) நுழைவாயில் அருகே,...
கடந்த 2008ம் ஆண்டு அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹட்கேஷ்வர் உள்ளிட்ட 21 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். 246-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹர்கத் உல் ஹிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த வழக்கை அகமதாபாத்...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான 10 நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆக.16-ம் தேதி தொடங்கி, ஆக.26-ம் தேதி வரை திருவோணம் திருநாளுடன் நிறைவடைகிறது. இந்த விழா காலம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சுற்றுலா நிகழ்வுகளால் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும். எனவே, பயணிகள் வசதிக்காக, 100-க்கும் மேற்பட்ட...
ராணுவம், கடற்படை, விமானப்படையில் 50 சதவீதம் முதல் 75 சதவீத அக்னி வீரர்களை நிரந்தர பணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் 3 ஆண்டுகளுக்கு குறைவான அனுபவம் கொண்ட இந்திய ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர்.
கார்கில் போருக்குப் பிறகு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரமணியம், லெப்டினென்ட் ஜெனரல்...
ஆக்ராவில் தாஜ்மகால் வளாகத்தில் அகழாய்வு நடத்தக் கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் ஏஎஸ்ஐ-க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உ.பி.யின் ஆக்ராவில் உலகின் 7-வது அதிசயமாக கருதப்படும் தாஜ்மகால் உள்ளது. இது முகலாய மன்னர் ஷாஜஹானால் 1563-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது அங்கிருந்த ஒரு கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுகின்றன.
தற்போது உ.பி.யின் பகவான் ஸ்ரீ அக்ரேஷ்வர் மஹாதேவ் நாகநாதேஷ்வர் விராஜ்மான் தேஜோ மகாலயா...
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் கராஜியா கிராமத்துக்குள் சிங்கம் ஒன்று நேற்று புகுந்தது. அது ஒரு பசு மாட்டு கூடாரத்தின் அருகே பதுங்கியிருந்தது.
அப்போது பசுக்களுக்கு தீவனம் போடச் சென்ற உரிமையாளர் பார்மர் மீது சிங்கம் பாய்ந்து அவர் தப்ப முடியாமல் கால்களால் அழுத்தி பிடிக்குள் வைத்திருந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால், அவரின் கை சிங்கத்தின் வாயிலும்,...
உள்நாட்டில் 100 நாளில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி அனைத்து சோதனைகளையும் முடித்து மத்திய ஆயுதப்படைகளுக்காக கொள்முதல் செய்யப்படவுள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘த்விப்பா’. ராணுவம் மற்றும் போலீஸாருக்கு துப்பாக்கிகள் தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு உரிமம் பெற்று இதுவரை 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரகங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனத்தில் யு-19 இயந்திரத் துப்பாக்கி, இலகு ரக இயந்திரத் துப்பாக்கி, யு-45,...










