சீன ஆக்கிரமிப்பு பற்றி உரிய விளக்கம் அளிக்காதது ஏன்? – அரசுக்கு கார்கே கேள்வி

0
17

காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், காங்​கிரஸ் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யப் பகு​திக்​குள் சீனா ஊடுரு​வி​யுள்​ள​தாகக் கூறப்​படும் விவ​காரம் தொடர்​பாக, மோடி அரசு வெளிப்​படை​யாக விளக்​கம் அளித்​திருக்க வேண்​டும்.

வழக்​கம்​போல இந்​தத் தகவல்​கள் தவறானவை என்று அரசு மறுத்துள்​ளது. ராணுவம் தனது கடமையை சிறப்​பாகச் செய்து வரும் நிலை​யில், சீனா​வுட​னான எல்லை தொடர்​பான முக்கியமான கேள்வி​களுக்கு மத்​திய அரசு தெளி​வான தகவல்களை வழங்​க​வில்​லை.

அயோத்தி ராமர் கோயிலுக்கு மக்​கள் வழங்​கிய காணிக்கை எவ்வளவு? எவ்​வளவு தங்​கம், வெள்ளி மற்​றும் பிற விலைமதிப்புமிக்க பொருட்​கள் சேகரிக்​கப்​பட்​டன? அந்த சொத்துகளின் கணக்கு என்ன என்​பதை தெரிவிக்க வேண்​டும்.

கீழ்​நிலை​யில் உள்ள சிலரை மட்​டும் சிறை​யில் அடைப்​ப​தால் இந்தப் பிரச்​சினை தீர்ந்​து​வி​டாது. எனவே, இந்த விவ​காரம் தொடர்​பாக பிரதமர் மோடி பக்​தர்​களிடம் மன்​னிப்பு கேட்​டு, அவர்​களின் கேள்வி​களுக்கு பதிலளிக்க வேண்​டும்.

இளைஞர்​களின் பிரச்​சினை​கள்

மேலும், அரசின் தவறான கொள்​கைகளே இளைஞர்​களை ஆழ்ந்த விரக்​திக்​குள் தள்​ளி​யுள்​ளன. மத ரீதி​யான பதற்​றத்தை உரு​வாக்​கும் போட்​டிக்​கும், இலவசத் திட்​டங்​களுக்​கான போட்​டிக்​கும் மத்​தி​யில், இளைஞர்​களின் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்பு மிகக் கடுமை​யாக புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த 12 ஆண்​டு​களில் நாடு முழு​வதும் 94,000 பள்​ளி​கள் மூடப்​பட்​டுள்​ளன.

உயர்​கல்வி தொடர்ந்து அதிக செலவு மிக்​க​தாக மாறி வரு​கிறது. கல்வி நிறு​வனங்​கள் அதிக அளவில் ஆர்​எஸ்​எஸ் அமைப்​புடன் தொடர்​புடைய​வர்​களின் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டுவரப்படுகிறது. மேலும், மாணவர்​களின் உண்​மை​யான பிரச்​சினை​களுக்கு அரசு உரிய கவனம் செலுத்​தாமல் இருப்பதாலேயே மாணவர்​கள் வீதி​களில் இறங்கி போ​ராடும்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வாறு ​கார்​கே கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here