திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க தலைவராக இருந்த சந்திரிமா பட்டாச்சார்யா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து எதிரணியுடன் சேர்ந்தார். இது மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக மம்தா இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர் சந்திரிமா பட்டாச்சார்யா. மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிலை குலையத் தொடங்கியது. திரிணமூல்...
மும்பையில் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும், புனே, சதாரா மலைப்பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான ‘ரெட்...
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேஷியா பயணத்தை முடித்துக் கொண்டு 8-ம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனேசியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, 9-ம் தேதி மெல்போர்ன் நகரில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் இந்தியர்கள்...
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை விவகாரம் வெளியாவதற்கு முன்பு ரூ.18 லட்சமாக இருந்த தினசரி டெபாசிட் ரூ.24 லட்சம் ஆக உயர்வு
admin - 0
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பு வரை, ராம ஜென்ம பூமி தீர்த்த க் ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் தினமும் சராசரியாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், திருட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இந்தத் தொகை தினமும் ரூ.24 லட்சம் முதல்...
சிறார் பாலியல் வீடியோ குறித்து இன்ஸ்டாகிராமில் விளம்பரம்: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்
admin - 0
பாலியல் வன்கொடுமை, சிறார் பாலியல் வீடியோ தொடர்பான விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் வருவது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபலமான சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து செயல்படும் மெட்டா நிறுவனம் நிர்வகிக்கிறது. வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ள ‘யூசர்நேம்’ அம்சம் குறித்து விளக்கம் அளிக்க மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு நோட்டீஸ்...
அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
இந்த விவகாரத்தில் உத்தபிரதேச அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்...
இந்திய - ஜப்பான் உறவு உண்மையில் மிகவும் சிறப்பானது என்றும், அது இரு நாடுகளுக்கு இடையே வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டில் மட்டும் ரூ.95,245 கோடி ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு...
ஜார்க்கண்டில் மேலும் 9 பேருக்கு மூளையை தாக்கும் மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள போட்கா பகுதியில் கொசுக்களால் ஏற்படும் ‘செரிப்ரல் மலேரியா' (மூளையை தாக்கும் மலேரியா) பரவி வருகிறது. கடந்த வாரம் இந்த நோய் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து, இதுவரை 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில் “போட்கா பகுதியில் மேலும் 9 பேருக்கு...
இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை
admin - 0
ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்தியா - ஜப்பான் வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார். குடியரசுத்...
நாட்டின் தலைநகரான டெல்லியில் ரசாயனம், உயிரியல், கதிர்வீச்சு, அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டு அவசர நிலை ஏற்பட்டாலும், தயார் நிலையில் அரசு உடனடியாக செயல்பட பாதாளத்தில் (நிலத்துக்கு அடியில்) கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு சிபிஆர்என் (கெமிக்கல், பயாலஜிக்கல், ரோடியோலாஜிக்கல் மற்றும் நியூக்ளியர்) கட்டுப்பாட்டு மையம் என பெயர். இதை டெல்லியில் உள்ள தீயணைப்புத்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்...










