பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் சமையல் உப்புக்கு பதிலாக சலவைப் பவுடர் கலக்கப்பட்டதால் 34 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
பிஹாரின் நாளந்தா மாவட்டம், நூர்சராய் வட்டாரத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட பிறகு 34 குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். கூடுதல் உப்பு கேட்ட மாணவர்களுக்கு, சமையல்காரர் தவறுதலாக உப்புக்குப் பதிலாக டிடர்ஜென்ட் பவுடரைக் கொடுத்ததால் இந்தச்...
பிஹார் மாநில அரசுப் பள்ளியில் மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத் தூள் கலக்கப்பட்டதால், அதைச் சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய மதிய உணவில், உப்புக்குப் பதில் சமையல்காரர் தவறு தலாகச் சலவைத் தூள் கலந்துவிட்டார். இந்த சோயாபீன் சாதத்தை சாப்பிட்ட 36 மாணவிகளுக்குத்...
உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறிய புனே இனிப்பு கடை மீதான எங்கள் நடவடிக்கை சரியானதுதான் என்று மகாராஷ்டிர உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய உணவு பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பொறுப்பேற்றபின், கடந்த ஜூன் மாதம் புனேவில் உள்ள குருநானக் டெய்ரி அண்ட் ஸ்வீட்ஸ் கடையில் சோதனை நடத்தப்பட்டு, அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசியதாவது: இந்தியப் பகுதிக்குள் சீனா ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மோடி அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
வழக்கம்போல இந்தத் தகவல்கள் தவறானவை என்று அரசு மறுத்துள்ளது. ராணுவம் தனது கடமையை சிறப்பாகச் செய்து வரும் நிலையில், சீனாவுடனான எல்லை தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவான தகவல்களை வழங்கவில்லை.
அயோத்தி...
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி. மஹுவா மொய்த்ரா பெண்களை அவமதிக்கும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி கிருஷ்ணாநகர் நீதிமன்றம் மஹுனா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது. பலமுறை சம்மன் அனுப்பியும் மஹுவா விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
“எங்களை கொன்று விடுங்கள்” – ஜார்க்கண்ட் தேர்வு ரத்தானதால் அதிர்ச்சியில் உறைந்த 2,000 அரசு ஊழியர்கள்
admin - 0
ஜார்க்கண்ட் அரசு தேர்வு ரத்தானதால் சுமார் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வேலையை பறித்ததற்கு பதிலாக எங்களை அரசு கொலை செய்து இருக்கலாம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக தலைநகர் ராஞ்சியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும்...
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி தைபாங்க்நங்க்பா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் உள்பட 46 பேர், நேற்று ஆயுதங்களுடன் மணிப்பூர் அரசிடம் சரணடைந்தனர்.
இம்பாலில் உள்ள 1-வது மணிப்பூர் ரைஃபிள்ஸ் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற ‘வீடு திரும்புதல்’ நிகழ்ச்சியில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆயுதங்கள், 216 தோட்டாக்கள் மற்றும் 3 வெடிபொருள்களை அரசிடம் ஒப்படைத்தனர்.
சரணடைந்தவர்களை வரவேற்ற முதல்வர் யும்னம் கெம்சந்த், “மீதமுள்ள போராளிகளும் ஆயுதங்களை கைவிட்டு,...
3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தமிழகம் தலையிடக் கூடாது – டி.கே.சிவகுமார் கருத்து
admin - 0
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குத் தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
இந்திய கூட்டாட்சியில் ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிட உரிமை இல்லை. இந்த அடிப்படை விதியைக் கூட தெரிந்துக் கொள்ளாமல் பேசக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும்...
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, 'வந்தே மாதரம்' பாடல் பாடியதில் சர்ச்சை எழுந்ததாகக் கூறி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது கர்நாடகா, டெல்லியில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "நாங்கள் மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் பாடிய அதே வந்தே மாதரம் பாடலைத்தான் பாடினோம்.
கடந்த 18...
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் பலர் வந்து நேரில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கொல்கத்தாவின் பரபரப்பான பகுதியில் நடந்த இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை கூறியதாவது: மத்திய கொல்கத்தாவின் மிர்சா...










