மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மினி லாரி கவிழ்ந்து ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டம் அம்ஹாய் தேவ்ரி கிராமத்தை சேர்ந்த 30-க்கும்மேற்பட்டோர் ஷாபுரா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் பிறகு மினி லாரி ஒன்றில் இரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் பட்ஜார் காட் என்ற இடத்தில் உள்ள...
கடந்த 2012-16 காலகட்டத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசமுதல்வராக பதவி வகித்தார். அப்போது, சுரங்க குத்தகை சட்ட விரோதமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அலகாபாத்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டுசிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் அகிலேஷ் யாதவ் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால்,...
இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் தகுதி நீக்கம்: சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை
admin - 0
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி மாற்று கட்சி வேட்பாளருக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதனியா கூறியதாவது:இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரே ஒரு தொகுதிக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர். மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட்...
பாஜக தலைமையிலான கூட்டணிக்கு முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
admin - 0
இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. சாலை உருவாக்கம், நீர்ப்பாசனக் கட்டமைப்பு, பழங்குடி மக்கள் மேம்பாடு என பல தரப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. அந்த...
உ.பி.யின் ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் ராஜினாமா: பாலிவுட் படங்களில் நடித்தவர், அரசியலில் இறங்கவும் திட்டம்
admin - 0
உத்தரபிரதேசம் ஜோன்பூரை சேர்ந்தவர் அபிஷேக் சிங். 2011-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் சொந்த மாநில கேடரில் பணியாற்றி வந்தார். திரைப்பட நாயகன் போன்று தனது தோற்றம் இருப்பதாக கருதும் அபிஷேக் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார். இவை வைரலாகி வந்த நிலையில், கடந்த 2015-ல்அயல்பணியாக டெல்லி மாநில அரசில் சேர்ந்து 5 வருடங்கள் பணியாற்றினார்.கடந்த 2022-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது...
ஆந்திராவில் குடும்ப அரசியல் மேலோங்கி விட்டது என மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.
ஆந்திராவில் வெகு விரைவில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மாநில கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர் தற்போது ஆந்திர முதல்வராக பதவி வகித்து...
டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவர் கடந்த சில வாரங்களாக நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கி வந்தார்எனவும், அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சை பெற்றவர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த நபரின் வயிற்றை எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது சிறுகுடலில் அதிகளவிலான நாணயங்கள் மற்றும் காந்தங்கள் அடைத்திருந்தது தெரியவந்தது....
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ-க்கள்: இமாச்சலில் பாஜக வேட்பாளர் வெற்றி
admin - 0
மாநிலங்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட...
ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்த அமைப்பை கடந்த 2019-ம் ஆண்டு அரசு தடை செய்தது.
இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி, தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான தடை மேலும் 5...
கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. எனினும் கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இதனால் அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும்...









