உத்தராகண்டில் புனித ஏரி அருகே கோயில் கட்டிய சாமியார்: பொதுமக்கள் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
admin - 0
உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள பனிமலை அருகே தேவி குந்த் என்ற புனித ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகே சுதேர்துங்கா ஆறு பாய்கிறது. பனிமலையிலிருந்து வரும் நீரால் உருவான ஏரி என்பதால் தேவிகுந்த் ஏரியை இப்பகுதி மக்கள் புனித ஏரியாக போற்றி வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஏரிக்கு அருகே பாபா சைதன்யா ஆகாஷ் என்ற சாமியார், சட்டவிரோதமாக சிறிய அளவிலான கோயில் கட்டியுள்ளார். இதில் கடந்த...
தேர்தல் முடிவில் அதிருப்தி தெரிவிக்கும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவுகளை சரிபார்ப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்ஓபி) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அதிருப்தி வேட்பாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கும் வழிவகை உள்ளது. மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவுகளை சரிபார்க்க 8 வேட்பாளர்களும், சட்டப்பேரவை தேர்தல் முடிவு களை சரிபார்க்க 3 வேட்பாளர்களும்...
நியூயார்க்கில் தேர் திருவிழா நடைபெற உதவிய ட்ரம்ப் உயிரை காப்பாற்றிய ஜெகந்நாதர்: இஸ்கான் தலைவர்
admin - 0
நியூயார்க் நகரில் தேர் திருவிழா நடைபெற உதவிய டொனால்டு ட்ரம்ப் உயிரை ஜெகந்நாதர் காப்பாற்றி விட்டார் என இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ட்ரம்ப்பின் காதில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது...
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ட்ரம்ப் மீதான வெறுப்புணர்வின் காரணமாக தாமஸ் மேத்யூ என்பவர் தனிநபராக அவரை கொலை செய்ய முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்ற கருத்தை மையமாகவைத்து அமெரிக்க அதிபர் தேர்தலில்...
சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணராக கருதப்படும் விக்ரம் மிஸ்ரி (59), நாட்டின் புதிய வெளியுறவு செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
வெளியுறவுத் துறையின் செயலாளராக இருந்த வினய் குவாத்ரா கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் அவருக்கு ஜூலை 14 வரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் வினய் குவாத்ரா நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய வெளியுறவு செயலாளராக விக்ரம் மிஸ்ரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்....
மாற்றுத் திறனாளி கிடையாது, இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படித்தவர் பூஜா: விசாரணையில் புதிய தகவல்கள் அம்பலம்
admin - 0
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் மாற்றுத் திறனாளி கிடையாது என்றும், ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பு படித்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் பூஜா மனோரமா திலீப்கேத்கர். இவர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டசமூகத்தினருக்கான (ஓபிசி)இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
பார்வைக் குறைபாடு, மூளை திறன் குறைபாடு ஆகியவை தனக்கு...
கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் மாயம்? – விசாரணை நடைபெறாதது ஏன் என அவிமுக்தேஷ்வரானந்த் கேள்வி
admin - 0
கேதார்நாத் கோயிலில் இருந்து 228 கிலோ தங்கத் தகடு காணாமல்போனதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படாதது ஏன் என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தராகண்டில் உள்ளஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று மும்பை வந்திருந்தார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரேவை அவரது வீட்டில் சந்தித்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன....
கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.187.3கோடி கொள்ளையடிக்கப்பட்ட தாக புகார் எழுந்தது.
இந்த ஊழலுக்கு உதவாததால் ஆண யத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் கடந்த மே மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜி சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா...
தமிழகத்துக்கு காவிரியில் 8,000 கனஅடி நீர் திறப்பு: கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
admin - 0
காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீரை திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து...
இந்திய ஊடகங்கள் உலகளவில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் நடைபெற்ற ஐஎன்எஸ் (இந்திய செய்தித்தாள் சங்கம்) கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:
ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மொழிகளுக்கு தனதுசமூக ஊடகங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இந்திய ஊடகங்கள் உலகளவில் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வளர்ச்சியடைந்த...










