சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: உத்தர பிரதேச இடைத் தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காணஉள்ளது. இதற்காக, அந்த கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கர்ஹல் தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக உள்ளது. இந்த தேர்தலில் கர்ஹல்மக்கள் எங்களது கட்சிக்குவரலாற்று வெற்றியை தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்களது கட்சி சார்பில் போட்டியிட தேஜ் பிரதாப் சிங்யாதவ் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.