Google search engine
கர்நாடகாவில் தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாயார் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் ச‌தாசிவ நகர் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், புகார்தாரர் கடந்த மே 25-ம் தேதி உயிரிழந்தார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் (சிஐடி) ஜூன் 12-ம்...
குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர்கள் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று காலை கொச்சி வந்து சேர்ந்தன. இவற்றில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 31 பேரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தெற்கு குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர்...
“இந்தியத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியனவற்றை சுட்டிக்காட்டிப் பாராட்டினார். 50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில்,...
ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படைகளின் முழுதிறனையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரெசி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். தெற்கு கதுவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி பாதுகாப்பு படையினரின்...
மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல. இரண்டு பழங்குடி இனங்களுக்கு இடையிலான மோதல் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் (மூன்றாம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மக்களை சமமாக மதித்துஅவர்களது நலனை உறுதி செய்பவரே உண்மையான ஆட்சியாளர்.சமயசார்பின்மை என்பதே இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாகும். கண்மணியைக் காப்பது போன்று சமயசார்பின்மையை புதிய மத்திய அரசு பாதுகாக்கும் என்று இந்த...
முஸ்லிம்களிடம் தனி நாடு கோரிக்கையை தூண்டிவிடும் நடவடிக்கைகளில் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு முகமைகளுக்கு உளவுத் துறை மூலமாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான உளவுத்தகவல்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு கிடைத்து வருகின்றன. நீதிக்கான சீக்கிய பிரிவினைவாத அமைப்பு (எஸ்எஃப்ஜே) காலிஸ்தான் தனிநாடு கோரி ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில்...
டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்தீவிரவாதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர்22-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, கடந்த 2001-ம் ஆண்டில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரீபை கைது செய்தனர். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு...
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும் பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உளவு நடவடிக்கைகளில் மிகத் திறமையானவராக கருதப்படும் அஜித் தோவல், 1968-ம்ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரி. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்பு இவர் கடந்த மே 2014-ல் மோடி முதன்முறையாக பதவியேற்றபோது இப்பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது முதல்...
டெல்லியில் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் நிறுவனம் சார்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து பெற்ற ரூ.69 கோடி கடனுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார். இவர் கடன் வாங்கிய நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்த தவறியதையடுத்து, உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் வங்கி அவருக்கு எதிராக லுக் - அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது. இதை எதிர்த்து அந்த இயக்குநர் டெல்லி நீதிமன்றத்தில்...
இந்திய அரசியல் வரலாற்றில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல்வாதிகள் சிலரில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உடனுக்குடன் அமல்படுத்தும் அரசியல் தலைவர். ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஐ.டி. துறையை முடுக்கி விட்டவர். திருப்பதி அருகே நாராவாரி பல்லி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் சந்திரபாபு. கடந்த 1975-ல்காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவசரநிலை காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார். சந்திரபாபுவின் ஆற்றலை கண்டு...