Google search engine
உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட மர்மப் பொருளால் வாரணாசி - சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் (19168) 22 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் வாரணாசி - சபர்மதி இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ்...
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட‌து. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட,...
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இன்று (சனிக்கிழமை) டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு...
ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுகிறது. இன்று மாலை 3 மணிக்கு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நீண்ட எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனெனில் ஊடக சந்திப்புக்கான தேர்தல் ஆணைய அழைப்பில் எந்தெந்த மாநிலங்களின் சட்டப்பேரவைத்...
‘உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் செல்வாக்கு சமீபத்தில் அதிகரித்தது, இங்குள்ள குற்றவாளிகளின் பலத்தை அதிகரித்துள்ளது’’ என மாநிலங்களவை பாஜக எம்.பி சுதன்ஷு திரிவேதி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதன்ஷு திரிவேதி அளித்த பேட்டியில் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை மற்றும்பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் சிக்கிய 2 பேர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றவாளிகளை...
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்கள் ஒன்றாக இணைந்து காஷ்மீர் கிராமிய நடனம் நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ‘கஷுர்ரிவாஜ்’ கலைத் திருவிழா நேற்றுஏற்பாடு செய்யப்பட்டது. பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட குத்துவாள் ராணுவ பிரிவினரும் இந்திரானிபாலன் அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.பேராசிரியர் ஷவுகத் அலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் காஷ்மீர்பாரம்பரிய இசை,...
கர்நாடகாவில் அங்கன்வாடியில் குழந்தைகளின் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும்அதன் ஊழியர்கள் திரும்பவும் வாங்கிக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் கொப்பல் மாவட்டம், குண்டூரில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இங்கு பயிலும்குழந்தைகளுக்கு முட்டையுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனை அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோர் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட முயன்றனர்....
வங்கதேசத்தில் மாணவர்களால் துவக்கப்பட்ட போராட்டம் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. உயிர்தப்பிய அவர் இந்தியாவில் தற்காலிகமாக தங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு முக்கியப் பங்கு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் மீது தாக்குதல் துவங்கி உள்ளது. அதிலிருந்து தப்பி இந்தியஎல்லைகளில் நுழைய முயன்றஅவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இந்துக்கள் மீதான தாக்குதலை தடை செய்யப்பட்ட தீவிரவாத...
தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பல அடி ஆழம் வரை இறங்கி, நிலத்திலிருந்து நிலக்கரியை வெட்டி, அதனை லாரிகளில் நிரப்பி மேலே கொண்டு வரும் மிக கடினமாக பணியை ஆண்களே செய்து வந்தனர். இப்பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் காச நோயாலும், இதய நோயாலும் பாதிக்கப்பட்டு உயிர் துறந்த சம்பவங்கள் ஏராளம். உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு பணியை, பணிக்காலம் முடியும் முன்பே இழந்தாலோ அல்லது...
நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி ஒருவரின் வருமான உச்ச வரம்பைப் பொறுத்து, அவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கப்படும். அதற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.18 லட்சமாக இருந்தது. அவர்கள் பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் வட்டி மானிய பலன்களைப் பெற...