ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை: தேர்தல் ஆணையம் இன்று வெளியீடு

0
44

ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுகிறது. இன்று மாலை 3 மணிக்கு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நீண்ட எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனெனில் ஊடக சந்திப்புக்கான தேர்தல் ஆணைய அழைப்பில் எந்தெந்த மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகிறது என்று குறிப்பிடப்படவில்லை.

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் வரும் நவம்பர் 3 மற்றும் 26 தேதிகளிலும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி 2025-ம் முடிவடைகிறது. இதனையொட்டி இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இந்த தேர்தல் தேதிகளை இன்று மாலை 3 மணியளவில் டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேர்தலை ஆணையம் அறிவிக்கும் எனத் தெரிகிறது.ஜம்மு-காஷ்மீர் தேர்தல் எப்போது? ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சாசனத்தின் 370-வது பிரிவு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. மேலும் மாநிலமானது, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசால் பிரிக்கப்பட்டது.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பான வழக்கில் செப்டம்பர் 30-க்குள் ஜம்மு காஷ்மீர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் ஆய்வும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தது.

இந்நிலையில் 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புடன் இன்று ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here