அமெரிக்கா தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்

0
19

அமெரிக்கா நடத்​திய தாக்​குதலில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​ததைக் கண்​டித்து டெல்​லி​யில் உள்ள ட்ரம்ப் போஸ்​டர்​களை ஆட்டோ ஓட்​டுநர்கள் கிழித்து ஏறிந்​தனர்.

அமெரிக்​கா​வின் 250-வது சுதந்​திர தினம் மே மாதம் கொண்டாடப்பட்​டது. இதையொட்​டி, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் ஒரு பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கி​னார். இதன்​படி, டெல்லி முழு​வதும் சுமார் 100 ஆட்டோ ரிக்​‌ஷாக்​களில் ‘ஹேப்பி பர்த்டே அமெரிக்​கா’ என்ற வாசகங்​கள், ட்ரம்ப் படத்துடன் போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில், கடந்த வாரம் ஓமன் வளை​கு​டா​வில் உள்ள ‘எம்டி செட்​டபெல்​லோ’ என்ற எண்​ணெய் டேங்​கர் கப்​பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்​திய தாக்​குதலில், 3 இந்​திய மாலுமிகள் கொல்​லப்​பட்​டனர். இதைக் கண்​டிக்​கும் வகை​யில் டெல்லி ஆட்டோ ரிக்​‌ஷாக்​களில் இடம்​பெற்​றிருந்த போஸ்​டர்​களை ஓட்டுநர்​கள் கிழித்து எறிந்​தனர்.

இது தொடர்​பான வீடியோ சமூக ஊடகங்​களில் வெளியாகி வைரலாகி வரு​கிறது. அதில், ஆட்டோ ஓட்​டுநர்​கள் ட்ரம்​புக்கு எதிராக முழக்​கமிடு​வதும், சக ஆட்டோ ஓட்​டுநர்​களை அந்த போஸ்​டர்​களை கிழிக்​கு​மாறு வற்​புறுத்​து​வதும் பதி​வாகி​ உள்​ளது. “அவர்​கள் அங்கே நம் இந்​தி​யர்​களைக் கொல்​கிறார்​கள்” என்று ஒரு ஓட்​டுநர் கூறு​வதுடன், மற்​றவர்​கள் தங்​கள் ஆட்​டோ​வில் எந்​தவொரு அமெரிக்க விளம்​பரத்​தையோ அல்​லது செய்​தி​யையோ வைக்க வேண்​டாம் என்று எச்​சரிக்​கிறார். இந்த வீடியோ ‘இந்துஸ்தான் ஜிந்​தா​பாத்’ என்ற முழக்​கத்​துடன் முடிகிறது.

இந்த விவ​காரத்​தில், சிவிலியன் மாலுமிகளைக் கொல்​வதை ஒருபோதும் நியாயப்​படுத்த முடி​யாது என்று இந்​தி​யா, அமெரிக்க தூதர்​களை இரண்டு முறை நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரி​வித்​துள்​ளது. இந்​திய வெளி​யுறவுத் ​துறை அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கர், இந்த விவ​காரத்தை அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் மார்கோ ரூபியோ​விடம் கொண்டு சென்றுள்ளார்.

முன்​ன​தாக, மே மாதத்​தில் இப்​பிரச்​சா​ரம் தொடங்​கப்​பட்​ட​போது, ஒரு பாக்​கெட் தேயிலைக்​காக​வும், ஆட்​டோ​வின் கிழிந்த கூரையை மறைப்​ப​தற்​காக​வுமே தாங்​கள் இந்த போஸ்​டர்​களை ஒட்ட சம்​ம​தித்​த​தாக சில ஓட்​டுநர்​கள் தெரி​வித்​தனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here