டெல்லியிலிருந்து குவஹாத்தி வரையிலான புல்லட் ரயில் திட்டம் – பிரதமர் மோடி ஒப்புதல்

0
14

வடக்கு ரயில்வே புல்லட் ரயில் தடத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து அசாமின் குவஹாத்தி வரை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

பயணங்கள் மனித நாகரிக வளர்ச்சியில் இன்றியமையாதவை. இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளில் ஒன்றாக உள்ளது ரயில்வே. அதற்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வடக்கு ரயில்வேயில் புல்லட் ரயிலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.

புல்லட் ரயிலின் அதிவேக சேவை மூலம் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“வடக்கு ரயில்வே புல்லட் ரயில் வழி தடத்துக்கு பிரதமர் மோடி ஒப்பதல் அளித்துள்ளார். இது பல்வேறு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் இளைஞர்கள், நடுத்தர வர்கத்தினர் மற்றும் சிறு குறு கைவினை கலைஞர்கள் பயன் அடைவார்கள். அரசின் இந்த முன்னெடுப்பு முயற்சிக்காக பிரதமர் மோடியை அடுத்த 100 ஆண்டுகளுக்கு மக்கள் தங்கள் நினைவில் கொண்டிருப்பார்கள்.

Delhi, Agra, Kanpur, Lucknow, Ayodhya, Varanasi, Prayagraj, Patna, Siliguri, and Guwahati.

டெல்லியில் தொடங்கி, ஆக்ரா, கான்பூர், லக்னோ, அயோத்தி, வாரணாசி, பிரயாக்ராஜ், பாட்னா, சிலிகுரி வழியாக குவஹாத்தி வரை இந்த ரயில் சேவை இருக்கும். இந்த ரயில் பாதை திட்டத்துக்கான பணிகள் அடுத்த சில ஆண்டுகளில் நிறைவடையும்.

இந்த ரயில் பயணத்தின் டிக்கெட் விலை குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். நிச்சயம் இந்த ரயிலுக்கான டிக்கெட் விலை மலிவாகவே இருக்கும்” என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை, மும்பை – அகமதாபாத் இடையே நடைமுறைக்கு வர உள்ளது. 508 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதையில், புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது. 2030-க்குள் முழுமையான சேவை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here