‘அர்னாப்’ புயலால் ரூ.4,600 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

0
22

அர்னாப் புய​லால் ஆந்​திராவின் கடலோர மாவட்டங்களில் சுமார் ரூ.4600 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்​திர அரசு முதற்​கட்ட அறிக்​கை​யில் தெரிவித்துள்​ளது.

வங்​கக் கடலில் ஏற்​பட்ட அர்​னாப் புயல் யானம் – நர்​சாபுரம் அருகே புதன்​கிழமை காலை கரையை கடந்​தது. இதன் காரணமாக, ஆந்​திராவின் கடலோர மாவட்​டங்​களான விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்​பட்​டினம், குண்​டூர், பாபட்லா, அனகாபல்லி, கோதாவரி மாவட்​டங்​களில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது.

ஸ்ரீகாகுளம் மாவட்​டத்​தில் பலத்த மழை பெய்து வரு​வதுடன், ஒடிசா மாநிலத்​தின் பகலட்டி அணை​யின் மதகு​கள் திறந்து விடப்பட்​ட​தால், பஹுதா நதி​யின் நீர் ஆந்​திராவுக்​குள் புகுந்​தது. இதனால் சென்னை-கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை​யில், இச்சாபுரம் அருகே சாலை வெள்​ளத்​தில் மூழ்கி, வாகன போக்​கு​வரத்து தடைபட்​டுள்​ளது.

மேலும், இம்​மாவட்​டத்​தில் ரயில்வே தண்ட​வாளங்​களும் கன மழையில் அடித்​துச் செல்​லப்​பட்​ட​தால் ரயில் போக்​கு​வரத்​தும் ஸ்​தம்​பித்​துள்​ளது.

கிழக்கு கோதாவரி மாவட்​டம் கொம்​மரி​குண்டாவை சேர்ந்த நரசம்மா (52) என்​பவர் ஈர​மான துணிகளை வீட்டு கூரை மீது காயவைக்க சென்​றார். அப்​போது உயர் அழுத்த மின்​சார கம்பி அவரது வீட்​டின் மீது விழுந்​திருந்​தது.

இதனை அறி​யாமல் நரசம்மா துணியை காய போட்​ட​தால் அவரை மின்​சா​ரம் தாக்கியது. உடனே அங்​கிருந்த அவரது கணவர் பங்​காரய்யா (57), மனைவியை காப்​பாற்ற ஓடி சென்​றார். அவரை​யும் மின்​சா​ரம் தாக்​கியது. இரு​வரும் சம்​பவ இடத்​திலேயே தூக்கி எறியப்​பட்டு உயி​ரிழந்​தனர்.

அர்​னாப் புயல் காரண​மாக தகவல் தொழில்​நுட்​பம் பாதிக்கப்பட்டு, மேற்கு கோதாவரி அந்​தர்​வேதி அருகே ஒரு பெரிய கப்​பல் கடலிலேயே நின்று விட்​டது. கடற்​படை​யினர் ஹெலிகாப்​டரில் விரைந்து சென்று 13 பேரை மீட்டனர். மீதமுள்ள 7 பேரை மீட்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

அர்​னாப் புய​லால் பாதிக்​கப்​பட்ட பகுதி​களை நேற்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஹெலிகாப்​டர் மூலம் ஆய்வு செய்தார்.

பின்​னர் அவர் தலை​மையில் அமைச்​சரவை கூட்​டம் நடந்​தது. அப்​போது சந்​திர​பாபு நாயுடு கூறுகை​யில், “அர்​னாப் புய​லால் சுமார் 200 படகு​கள் நாசம் அடைந்​துள்​ளன. 8 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் ரூ.4,600 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

தொடர்ந்து பல மாவட்​டங்​களில் மழை பெய்து வரு​கிறது. இன்று இரவுக்​குள் 90 சதவீதம் மின் இணைப்பு வழங்​கப்​பட்டு விடும். இழப்பீடு வழங்க மத்​திய அரசுக்கு விரைவில் அறிக்கை தாக்​கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது” என்​றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here