புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது – உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்

0
16

உச்ச நீதிமன்றம் கடும் கண்​டனம் தெரி​வித்​திருந்த நிலை​யில், புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்​திய அரசு 93% வரை குறைத்​துள்​ளது. சில்​லறை விற்​பனையாளர்​களுக்கு ரூ.2,700-க்கு வழங்​கப்​படும் புற்​றுநோய் மருந்து, நோயாளி​களிடம் 10 மடங்கு அதிக விலைக்கு விற்​கப்​படுவ​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

மருந்​துகளின் விலைக்​கும், நோயாளி​களிடம் வசூலிக்​கப்​படும் தொகைக்​கும் இடையேயான இந்த மிகப்​பெரிய விலை வித்​தி​யாசம் குறித்து நீதிப​தி​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர். இதனையடுத்து, புற்​றுநோய் மருந்​துகளின் விலையை கட்​டுப்​படுத்​தும் நட​வடிக்​கை​யாக, அவற்​றுக்​கான வர்த்​தக லாப வரம்பை 30 சதவீத​மாக குறைக்க மத்​திய அரசு முடிவு செய்​தது.

இந்​நிலை​யில், தேசிய மருந்து விலை நிர்​ணய ஆணை​யம் 543 புற்றுநோய் மருந்​துகளின் அதி​கபட்ச சில்​லறை விலையை (எம்ஆர்பி) திருத்​தி​யமைத்​துள்​ளது. ஒரு சில மருந்​துகளின் விலை 93% வரை குறைக்​கப்​பட்​டுள்​ளது. திருத்​தப்​பட்ட பட்​டியலின்​படி, சில வகை மார்​பகப் புற்​றுநோய்​களுக்கு சிகிச்​சையளிக்​கப் பயன்படுத்​தப்​படும் ‘பால்​போசிக்​லிப்’ மருந்​தின் விலை ரூ.40,421 லிருந்து ரூ.2,720 ஆகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

கீமோதெரபி மருந்​தான ‘தியோடெபா’வின் விலை, ஒரு குப்​பிக்கு சுமார் ரூ.80,072-லிருந்து ரூ.7,150 ஆகக் குறைந்​துள்​ளது. பல்​வேறு புற்​றுநோய்​களின் சிகிச்​சையில் பயன்​படுத்​தப்​படும் ‘டசாடி​னிப்’, ‘லென்​வாடி​னிப்’, ‘அபிராடெரோன்’ மற்​றும் ‘ஓலபாரிப்’ ஆகிய மருந்​துகளின் விலை​யும் கணிச​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளன.

இருப்​பினும், 21-க்​கும் மேற்​பட்ட புற்​றுநோய் வகைகளுக்​குப் பரிந்​துரைக்​கப்​படும் மற்​றும் ‘பெம்ப்​ரோலிஸுமாப்’ என்ற முக்​கிய மூலப்​பொருளைக் கொண்ட ‘கீட்​ரூடா’வின் விலை ரூ.2,16,500 என்ற அளவிலேயே நீடிக்​கிறது. மார்​பகப் புற்​றுநோய்க்கு சிகிச்சையளிக்​கப் பயன்​படுத்​தப்​படும் ‘ரிபோசிக்​லிப்’ (கிரிக்ஸானா) ரூ.24,435 என்ற விலை​யில் மாற்​றமில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here