ஜாமியா மிலியா பல்கலை.யில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

0
25

ஜாமியா மிலியா பல்​கலை. மாணவர் சங்க அரசியலமைப்​புக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்ட 15 நாள்​களுக்​குள் தேர்​தல் நடை​பெறும் என்று பதி​வாளர் மஹ்​தாப் ஆலம் ரிஸ்வி தெரி​வித்​தார். இதை மாணவர்​கள் ஏற்​க​வில்​லை. தலை​மைத் தேர்தல் அதி​காரியை நியமிக்க வேண்​டும், தேர்​தலுக்​குத் தெளிவான கால அட்​ட​வணை வேண்​டும் என்று வலி​யுறுத்​தினர்.

நேற்று காலை சுமார் 100 மாணவி​கள் பல நுழை​வுவா​யில்​கள் வழியாக வளாகத்​துக்​குள் சென்​றனர். சிலர் 7-ம் எண் நுழைவுவாயில் அருகே திரண்​டு, “டெல்லி போலீசே, திரும்பிப்போ” என முழக்​கமிட்​டனர். இணை​ய​வழி வகுப்​பு​களை நிறுத்​துதல், உணவகங்​கள்​-நூல​கம் திறப்​பு, அரசி​யலமைப்பு ஒப்புதலுக்​குக் காலக்​கெடு, தலைமை ஒழுங்கு அதி​காரி​யின் பதவி வில​கல் ஆகியவை மாணவர்​களின் பிற கோரிக்​கைகள் ஆகும்.

5 மணி நேரப் பேச்​சு​வார்த்​தைக்​குப் பின், மாணவர்​களின் இடைநீக்க உத்​தரவு ரத்து செய்​யப்​படும் என்​றும், பாது​காப்பு ஊழியர்​களின் அத்​து​மீறல் குறித்து விசா​ரிக்​கப்​படும் என்​றும் உறுதி அளிக்​கப்​பட்​டது. கடந்த அக்​டோபர் 12-ல் தொடங்​கிய உண்ணா​விரதப் போராட்​டத்​தைத் தொடர்ந்​து, தேர்​தல் விதி​களை வகுக்க நிர்​வாகம் குழு அமைத்​தது.

எனினும், கால​வரையற்ற உண்​ணா​விரதம் இருந்த 4 மாணவர்களில் இரு​வர் திங்​கள்​கிழமை போராட்​டத்தை முடித்​துக் கொண்ட நிலை​யில், ஏபின் பேசில் மற்​றும் ரெஹான் கான் தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். பதற்​றம் அதிகரித்​த​தால் அனைத்து வகுப்​பு​களும் இணை​ய​வழிக்கு மாற்றப்​பட்​டுள்​ளன. மறு அறி​விப்பு வரும் வரை வளாகத்​தின் நுழை​வுவா​யில்​களும்​ நூல​கங்​களும் மூடப்பட்டுள்ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here