கடந்த 5 ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர்...
மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாட்டுக்கு பயன் என்ன? – கனிமொழி எம்.பி. கேள்வி
admin - 0
‘மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன?’ என நேற்று மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விகளில், ‘மத்திய அரசின் திறன் இந்தியா மிஷன் என்ற இயக்கத்தில் வரும் திட்டங்களின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக என்ன?
குறிப்பாக...
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்புலி அருகே உள்ள பெண்ட கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். என்றாலும் இவர்களில் பலர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை, சரிவர படிப்பதில்லை என கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு அனைத்து மாணவ, மாணவியரையும் வழக்கம்போல் பள்ளி மேடைக்கு முன் தலைமை ஆசிரியர் ரமணா வரச்சொன்னார். பிறகு மாணவர்கள் முன் தரையில்...
கேதார்நாத் பகுதிக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் வர தடை விதிக்க வேண்டும் என கேதார்நாத் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம், கேதார்நாத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஆஷா நவுதியால் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “கேதார்நாத் பகுதி மக்களுடன் நான் கலந்துரையாடினேன். அப்போது, கேதார்நாத்துக்கு வரும் இந்துக்கள் அல்லாதவர்கள் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தப் பகுதிக்கு வர தடை விதிக்க வேண்டும். இப்பகுதி...
ம.பி.யின் சிவபுரி மாவட்டம், கொலாரஸ் பகுதியை சேர்ந்தவர் மந்திரவாதி ரகுவீர் தகாத். இவரிடம் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஆண் குழந்தை ஒன்றை அதன் பெற்றோர் கடந்த வியாழக்கிழமை கொண்டுவந்து காட்டியுள்ளனர்.
இதையடுத்து குழந்தைக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி ரகுவீர் தகாத் சடங்குகளை செய்துள்ளார். அப்போது அவர் குழந்தையை தலைகீழாக பிடித்து கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்கு மேலே காட்டியுள்ளார். இதில் குழந்தையின் கண்களில் காயம் ஏற்பட்டது. பின்னர், மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தையின் கண்கள்...
பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை. அந்த நாடு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த லெக்ஸ் பிரிட்மேன் (41), பிரபல கணினி விஞ்ஞானி ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை அவர் நேர்காணல் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உக்ரைன் அதிபர்...
மத்திய பிரதேச மாநிலம் மவுகஞ்ச் மாவட்டத்தில் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரை மீட்பதற்கு சென்ற காவல் துறை அதிகாரியை ஒரு கும்பல் கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மவுகஞ்ச் மாவட்டத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது கத்ரா கிராமம். இங்குள்ள ஒரு கும்பல் அசோக் குமார் என்பவர் உயிரிழந்ததற்கு பழிதீர்க்கும் விதமாக சன்னி திவேதி என்பவரை கடத்திச் சென்று ஒரு அறையில் பிணைக்...
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 190-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து அம்மாநில மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கை: குவாலியர் கம்ல ராஜா அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மகப்பேறு துறையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ள ஏசி பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
இதையடுத்து புகைமூட்டம் அதிகமானதையடுத்து,...
இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியாவின் கருத்து இன்று தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அது பாஜகவின் சித்தாந்தத்தால் தாக்கப்படுகிறது. இந்தியாவின் செல்வம் கோடிக்கணக்கான இந்தியர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பிரதமருக்கும் பாஜகவுக்கும் நெருக்கமான ஒரு...
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.
ரன்யா ராவை...










