Google search engine
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி...
இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (க்யூஆர் - எஸ்ஏஎம்) வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கியபோது தரைவழி தாக்குதலைவிட வான் வழி தாக்குதல்தான் அதிகமாக இருந்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலனவை துருக்கி மற்றும் சீன...
கடந்த 11 ஆண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி குறித்து ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்... ஒரு புதிய பாரதம் உருவாகிறது - இங்கு வளர்ச்சி என்பது உள்நாட்டு மொத்த உற்பத்தியால் (ஜிடிபி) அளவிடப்படுவதில்லை. கவுரவம் மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. கடப்பாவைச் சேர்ந்த அன்னம் லட்சுமி பவானி சணல் பை தயாரிக்கும் அலகை தொடங்குவதற்கு முத்ரா கடன் பெற்றார். ஹரியானாவில்...
மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஆபரேஷன் ஹனிமூன்’ பற்றிய விவரம் வெளிவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம்...
இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் இன்று ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜூன் 11 புதன்கிழமை, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A...
மும்பை அருகே இரு புறநகர் ரயில்கள் கடந்து சென்றபோது, படியில் தொங்கி சென்ற பயணிகள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் (சிஎஸ்எம்டி) இருந்து தானே மாவட்டம் கசரா நோக்கி நேற்று காலை 9 மணிக்கு புறநகர் ரயில் புறப்பட்டு சென்றது. முதல் வேலை நாள், அலுவலக நேரம் என்பதால் ரயிலில்...
ஒடிசாவில் காலஹந்தி மாவட்டத்தில் தொழிலதிபரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரியை விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். 2021 ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான திமான் சங்மா திரிபுராவைச் சேர்ந்தவர். அகர்தலாவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக், பட்டம் முடித்தவர். . இவர் காலஹந்தி மாவட்டத்தின் தரம்நகர் துணை ஆட்சியராக உள்ளார். உள்ளூர் தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக துணை ஆட்சியர் திமான் ரூ.20...
 ​முன்​னாள் மத்​திய அமைச்​சரும் பிஹாரின்​ மறைந்த தலை​வரு​மான ராம் விலாஸ் பஸ்​வான் தொடங்​கிய கட்சி லோக் ஜனசக்தி (எல்​ஜேபி). இவர், மத்​தி​யில் எந்த கட்சி தலை​மை​யில் ஆட்சி வந்​தா​லும் கூட்​டணி வைத்து அமைச்​ச​ராக இருந்தவர். இவரது மகன் சிராக் பஸ்​வான், தற்​போது பாஜக தலை​மையி​லானக் கூட்​ட​ணி​யில் மத்​திய அமைச்​ச​ராக பதவி வகிக்கிறார். ஆரா​வில் நேற்​று​முன்​தினம் எல்​ஜேபி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது எல்​ஜேபி தலை​வர் சிராக் பஸ்​வான் பேசுகை​யில், ‘‘நான் சட்​டப்​பேரவை...
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பஹல்காம் பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. எனவே அப்பகுதிவாசிகள் குதிரைகள் மூலம் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருமானம்தான் அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. சுமார் 6 ஆயிரம் குதிரைகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பஹல்காமிலிருந்து பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு...
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நெரிசல் மரணங்கள் தொடர்பாக எனக்கே தாமதமாகத்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது 3.15 மணிக்கு சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் எனக்கு மாலை 5.45 மணிக்குத்தான் தகவல் கிடைத்தது. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை. அதன் காரணமாகவே உளவுத் துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளன‌ர். இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. இதில் அரசு...