உத்தர பிரதேச காவலர் பணிக்கான தேர்வில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேச காவல் துறையில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்டில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 48 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 60,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்த குஷ்பூ, கவிதா,...
இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போலி பாஸ்போர்ட், போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ, இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் இந்தியாவுக்கு மொத்தம் 98.40 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளனர். இந்தியாவுக்குள் நுழையும்...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் மிகவும் ஏழ்மையான 40% குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மருத்துவக் காப்பீட்டு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டு, பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த...
டெல்லியில் தர்ஷனா ஜெயின் என்கிற 80 வயது மூதாட்டி தனது 59 வயது மகனுக்கு சிறுநீரக தானம் அளித்து மறு வாழ்வு அளித்துள்ளார்.
வடமேற்கு டெல்லி ரோஹிணி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் கடும் சிறுநீரக நோய் ஏற்பட்டதில் அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து அவரது தாயாரும் மகனும் சிறுநீரக தானம் அளிக்க முன்வந்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவரது தாயாரின் சிறுநீரகம் பொருத்தமாக...
ஹோலி: கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் 7 பேர் மீது ரசாயன வண்ணப்பொடி வீச்சு; மருத்துவமனையில் அனுமதி
admin - 0
கர்நாடகாவில் கதக் அருகே ஹோலி கொண்டாட்டத்தின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது மர்ம கும்பல் ரசாயனம் கலந்த வண்ணப்பொடியை வீசினர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் லக் ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்டிகையின்போது, பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது 3 பைக்குகளில் வந்த இளைஞர் கும்பல் அந்த மாணவிகள் மீது ரசாயனம்...
தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூரு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,...
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆண்டு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சிஐடி போலீஸார், அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஜூனில் 750 பக்க குற்றப்...
பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி, ரகசிய தகவல்களை அனுப்பிய, உ.பி. ஹஸ்ரத்பூர் ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்ரத்பூர் என்ற இடத்தில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு ராணுவத்துக்கு தேவையான பலவித ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ரவீந்திர குமார் என்பவர் பணியாற்றுகிறார். இவருக்கு பேஸ்புக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த நேகா சர்மா என்பவர் கடந்தாண்டு...
ஹோலி பண்டிகை நேற்று ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தூல்பேட்டை மல்சா புரம் எனும் இடத்தில் நடந்த ஹோலி கொண்டாடத்தில் குல்ஃபி ஐஸ்கிரீம்கள், பர்பிக்கள், சில்வர் காகிதத்தில் ஒட்டப்பட்டிருந்த இனிப்பு உருண்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் கஞ்சா கலந்திருப்பதை உணர்ந்த சிலர், இது குறித்து ரகசியமாக சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு விழா ஏற்பாடு செய்த...
முன்னாள் முதல்வர்கள் கட்டிய சொகுசு மாளிகைகளை என்ன செய்வது? – டெல்லி, ஆந்திரா அரசுகள் குழப்பம்
admin - 0
டெல்லி மற்றும் ஆந்திராவில் முன்னாள் முதல்வர்கள் மிகவும் ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைகளை என்ன செய்வது? என புதிய அரசுகள் குழம்பி வருகின்றன.
டெல்லியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியின் போது, அங்கு 8 ஏக்கர் பரப்பளவில் அரசு பங்களா ரூ.33 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி அர்விந்த் கேஜ்ரிவால் சொகுசு மாளிகை கட்டியதாக டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குற்றம்...










