அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நயன்தாரா – கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ படம் ஆகஸ்ட் 28-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பல பல சூப் வாங்கின பாய் ஆகஸ்ட் 28-ல் உங்களை சந்திக்கிறான்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
வீடியோவில், ரிலீஸ் தேதி அறிவிப்பு என ஆங்கிலத்தில் வருகிறது....
“நூற்றுக்கணக்கான தலைசிறந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களின் எழுத்துகள் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. திரைத்துறையில் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்று தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் தெரிவித்தார்.
புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் 3-வது உலக திரைப்பட விழா, புதுச்சேரியில் இன்று தொடங்கியது. அலையன்ஸ் பிரான்சிஸ் கருத்தரங்கு கூடத்தில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ஹரிஹரன் விழாவைத் தொடங்கி வைத்து பேசியது: “திரைப்படம் நம்மை...
தருண் விஜய், அக் ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் படம் ‘மாஸ்டர் பிளான்’. இதில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ். பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஜே.அலி மிர்சாக் இசை அமைக்கிறார். உத்ரா புரொடக் ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை, செ.ஹரி உத்ரா எழுதி இயக்குகிறார்.
இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. “தகுதிக்கு மீறிய...
நவீன் இயக்கி, நடித்து 2013-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘மூடர் கூடம்’. வித்தியாசமான நகைச்சுவை, விநோதமான கதாபாத்திரங்கள் மூலம் கவனிக்கப்பட்ட இப்படத்தின் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் எழுதி இயக்கி, நடித்துள்ளார்.
இதில், ஓவியா, சென்ராயன், ராஜாஜி, குபேரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ரீஷ் இசையமைத் துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன்...
தனது அறிமுகப் படமான 'ராக்கி' மூலம் தமிழ் சினிமாவில் ரத்தமும் வன்முறையும் நிறைந்த திரை மொழியை வெளிப்படுத்தியவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
அசர வைக்கும் கேமரா ஆங்கிள்கள், வியக்க வைக்கும் ஃப்ரேம்கள் ஆகியவை இருந்தாலும் ஏனோ அவரது அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பேசப்படவில்லை. தற்போது இயக்குநரிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது முந்தைய படங்களில் விட்டதை அருண் மாதேஸ்வரன் இதில் பிடித்தாரா என்று பார்க்கலாம்.
காவல்...
ரவி மோகன் நடித்து வரும் ’ப்ரோ கோட்’ படத்தின் தலைப்பு ‘ப்ரோ க்ளப்’ என மாற்றப்பட்டுள்ளது. நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் தனது தயாரிப்பில் அடுத்தடுத்து வர இருக்கும் படங்கள் பற்றி கூறும்போது, “ஜீனி படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ‘கராத்தே பாபு’ படத்தில் ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டும். 2 மாதத்தில் படம்...
ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீடு குறித்து ரியோ ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தீவிரமான கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். ‘ராம் IN லீலா’ திரையரங்குகளில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரியோ ‘ராம் IN லீலா’ படத்தில் நடித்து வந்தார்....
புதுவையில் 3-வது உலக திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: 10 நாடுகளின் 10 மொழிப் படங்களை இலவசமாக பார்க்கலாம்
admin - 0
புதுச்சேரியில் 3-வது உலகத் திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. பார்வையாளர்கள் 10 நாடுகளைச் சேர்ந்த 10 மொழிப் படங்களை இலவசமாக பார்க்கலாம்.
புதுவை திரை இயக்கம், பிரெஞ்சு மொழி மற்றும் பண்பாட்டை உலகெங்கும் பரப்பும் அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து 3-வது உலக திரைப்பட விழாவை நடத்துகிறது.
அலையன்ஸ் பிரான்சிஸ் கருத்தரங்கு கூடத்தில் இன்று (ஆக.7) தொடங்கி 9-ம் தேதி வரை 3 நாட்கள் இந்த திரைப்பட விழா நடக்கிறது. இன்று...
விஷால் இயக்கி நடித்திருக்கு ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 7-ம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விஷால் இயக்கி நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. துஷாரா விஜயன் நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
முதலில், ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் இயக்குநர் ரவிக்கும், விஷாலுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால், படத்தை...
நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் படத்துக்கு ‘மக்கள் காவலன்’ என பெயரிடப்பட்டு, படத்தின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஜெய் பீம்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ படங்களில் மூலம் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றவர் மணிகண்டன். ‘குடும்பஸ்தன்’ படத்துக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் படத்தில் நடிக்கிறார்.
’மக்கள் காவலன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை மணிகண்டன் தனது எக்ஸ் தள பக்கத்தில்...










