Google search engine
இந்த வாரம் எந்தெந்த மொழிகளில் என்னென்ன படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன என்பது பற்றிய பட்டியல் இது. ஜிடிஎன்: தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம்  (GDN) ‘ஜிடிஎன்’. மாதவன், பிரியாமணி, துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி உள்ளார். ஆக.7-ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. டிசி: போலீஸாரின் வன்முறையிலிருந்து ஒரு அப்பாவி குடும்பத்தை காப்பாற்ற  தேவதாஸும்...
இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘டோரதி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தான் இயக்கும் புதிய படத்தின் பெயர் டோரதி  என செவ்வாய்க்கிழமை கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1.28 நிமிடங்கள் ஓடும் டீசரில், அகலமான சாலையோரத்தில் வலதுபுறத்தில் இருந்து கிளம்பிவரும் புழுதி திரையை நிறைக்கிறது. புழுதி மங்கி திரை தெளிவாகும் போது, தூரத்தில் ஆடுகளின் சத்தம்...
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதை ‘ஜி.டி.என்’ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார். சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள இப்படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ளார். ‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ்...
நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமாரின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.    இந்த ஆவணப்படத்தை ‘தெய்வத்திருமகள்’, ‘மதராசப்பட்டிணம்’ படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார். இதனை அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி ‘கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்‌ஷன்’ கீழ் தயாரிக்கிறார். இந்த ஆவணப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதில் வீடியோகிராபர் நியோல் கெம்மன், ஒளிப்பதிவாளர்கள் ரிப்ஹு சர்மா, கபிலன் விநாயக், படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரும்...
சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்த பின்பும், படங்களின் வெற்றிகளை கணிக்க முடியாது என்று ‘கங்குவா’ தோல்வியும், ‘கருப்பு’ வெற்றியும் தனக்கு உணர்த்தின என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து சூர்யா அளித்த பேட்டி ஒன்றில், ‘முழு நம்பிக்கையுடன் உறுதியுடன் ஒரு படத்துக்கு (கங்குவா) கிட்டத்தட்ட 200 நாட்கள் வேலை செய்தோம். அந்தப் படம்  ரசிகர்களின் ஆதரவைப் பெறாமல்  தோல்வியடைந்தது. 45 நாட்கள் வேலை செய்த ஒரு படம் (கருப்பு)...
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பே டயானா’. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பணிகள் முன்பே முடிக்கப்பட்டாலும், அனைத்து தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் படம் தற்போது...
துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.ஜே.பாலாஜியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கரண் இயக்குநராக அறிமுகமாகும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பூஜை முடிந்து, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது துருவ் விக்ரம் உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மகான்’ படத்துக்குப் பிறகு சந்தோஷ் நாராயணன் இசையில்...
கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார். தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்ஷல்’ மற்றும் கல்யாண் ஷங்கர் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இதில் கல்யாண் ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார். 2017-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வேலைக்காரன்’...
“என்னை வெற்றி பெற வைத்த ரசிகர்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும். நிச்சயம் நிறைவேறும்” என்று  நடிகர் சூர்யா உருக்கமாக பேசினார். ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம்  ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் நடந்தது. விழாவில் நடிகர் சூர்யா ரசிகர்களுக்கும் தனக்குமான உறவை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில், “என் படத்தின் வசனம் ஒன்றுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அதை சொல்லி...
நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றி வந்தார். ‘ஏகே64’ என அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அறிவிக்கப்பட்டது. அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார். இது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள...