துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் துருவ் விக்ரம் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக் ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருப்பது...
திரைப்படங்களில் அதிரடிச் சண்டைக் காட்சிகள் (Action Sequences) பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும். ஒரு சண்டைப் பயிற்சியாளர் ஆபத்தான செயல்களை பாதுகாப்புடன், அழகியலுடன், கதையின் தேவைக்கேற்ப வடிவமைக்கும் படைப்பாளி.
சண்டைக் காட்சியின் வடிவமைப்பு திரைக்கதையை வாசிப்பதிலிருந்தே தொடங்குகிறது. கதாபாத்திரத்தின் வயது, உடல் திறன், உணர்ச்சி, சமூகப் பின்னணி, பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், காட்சியின் இடம், காலநிலை போன்ற அனைத்தையும் ஆராய்ந்து சண்டையின் பாணியைத் தீர்மானிக்கிறார் ஸ்டன்ட் கொரியோகிராஃபர்.
ஒரு காவல்துறை அதிகாரியின்...
நடிகை ஜோதிகா தனது 20-வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு, ‘எங்களின் சிறப்பான நாளின் சில தருணங்கள்’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நட்சத்திர தம்பதியான சூர்யா - ஜோதிகா தங்களின் 20-வது திருமண நாளை செப்டம்பர் 11-ம் தேதி கொண்டாடினர். அந்தக் கொண்டாட்டத்தின் பதிவுகளையும், புகைப்படங்களையும் ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமண நாள் கொண்டாட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை செப்டம்பர் 15-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம்...
பிரித்விராஜின் ‘டாய்ரா’ முதல் விமலின் ‘சண்டக்காரி’ வரை இந்த வாரம் பல வித்தியாசமான படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. அதன் பட்டியல் இது.
என்ன விலை: சஜீவ் பழவூர் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘என்ன விலை’. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன், கமலேஷ் ஜெகன், விஜயலட்சுமி வீரமணி, ஷாஷா சிவகுமார், மோகன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தமிழ் படம் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில்...
புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், ‘கன்னடத்துப் பைங்கிளி’. இதை சாய்ரமணி இயக்கியுள்ளார். இதில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படம் இது.
டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. எம்.பி.எம். என்டர்டெயின்மென்ட் சார்பில்...
ரியோவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில், ரியோ – சானியா ஐயப்பன் நடித்துள்ள படம் ‘மேடி’. இவர்களுடன் சிங்கம் புலி, ஆர்.ஜே.விஜய், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி ஒரேகட்டமாக நடந்து வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ரோல் டைம் ஸ்டூடியோஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது....
சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், ‘மண்டவெட்டி’. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் அவரே தயாரித்துள்ள இப்படம், உளவியல் ரீதியான பதற்றம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கும் இருண்ட அமானுஷ்ய க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
செஞ்சி எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள மர்மமான தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான அச்சத்தையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை நகர்கிறது. பிரகாஷ் மனிதன் ஒளிப்பதிவு...
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இதில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் வரவேற்பைப் பெற்றுவருகிறது....
‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியதாக நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவான ‘மண்டாடி’ படம் கடந்த செப்.10 அன்று வெளியானது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தொடர் பாசிட்டிவ் விமர்சனங்களால் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு...
“கதையும் உணர்ச்சிகளும் மொழிக்கு அப்பாற்பட்டவை” – படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி நேர்காணல்
admin - 0
“ஒரு திரைப்படத்துக்கான காட்சிகளை வெட்டிச் சேர்ப்பது மட்டும் படத்தொகுப்பு அல்ல. ஒரு கதையை அதன் சுவைக் குறையாமல் சொல்லும் முக்கிய கலைதான் அது” என்கிறார் படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படத் தொகுப்பாளர்களில் ஒருவரான இவர், அஜித்தின் ‘துணிவு’, ‘வலிமை’, ‘குட் பேட் அக்லி’, விஷாலின் ‘மார்க் ஆண்டனி’, கார்த்தியின் ‘சர்தார் 2’ உள்பட பல ஆக் ஷன் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
“தொடர்ந்து ஆக் ஷன் படங்களாகத்தான் எனக்கு...









