சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவகிவரும் ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டீசரின் தொடக்கத்திலேயே ஆபத்தில் இருக்கும் அரச குடும்பத்துக் குழந்தை, அதை அழிக்கத் துடிக்கும் தீய சக்திகள்...
‘தலைமைப் பண்பு’ குறித்து விஜய் சேதுபதி பேசிய விவகாரம்: விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் | Bigg Boss Tamil 10
admin - 0
‘பிக்பாஸ் 10’ நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் சர்ச்சையானதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் வார இறுதி எபிசோடில், போட்டியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் 'ஜனநாயக அறை' குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி விவாதித்தார்.
அப்போது வீட்டின் தலைவராக இருந்த ஷாத்திகா என்ற போட்டியாளரின் செயல்பாட்டை விமர்சித்து பேசிய அவர், “உண்மையான தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்,...
வி6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெற்றிச்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கிராண்ட் மாஸ்டர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் கனவுகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளராகப்...
‘அருமை தாய்மார்களே’ என பட்டிமன்ற மேடைகளிலும், ‘வாங்க பழகலாம்’ என சினிமாவிலும் இழுத்து மொழியும் தன் மதுரை தமிழால் தனி முத்திரைப் பதித்தவர் பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், ‘படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா...
கவனமுடன் செயல்பட்டு சாதனையாளராக திகழ்பவர் அஜித்குமார் என்று ராதிகா புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார் தனது படப்பிப்பு பணிகளுக்கு சற்று ஓய்வுகொடுத்துவிட்டு, கடந்த ஓர் ஆண்டாக மிசேலின் லீ மான் கோப்பை கார் பந்தையத்தில் பங்கேற்று வருகிறார். இந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவர் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அஜித் லண்டன் சென்றிருக்கிறார்.
இதனிடையே லண்டனில்...
லண்டன்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச ரேசிங் சர்க்யூட் பாதையில் 'மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை' கார் பந்தயத் தொடர், நடைபெற உள்ளது. இப்போட்டியின் தொடக்க நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பச்சைக்கொடி அசைத்துப் பந்தயத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதே பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அஜித்குமார், கூறியதாவது: "திரைத்துறையில் நாங்கள் சக நடிகர்களாக...
ஜெயா தொலைக்காட்சியில், 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான குஷ்பு நடத்திய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன், நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியையும் குஷ்பு நடத்துகிறார்.
புதிய அரங்கம், புத்தம் புதிய சுற்றுகள், எதிர்பாராத சவால்கள் என புதுமையும், விறுவிறுப்புமாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, இந்த முறையும் 3 அணிகளுக்கு இடையிலான போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி, நண்பர்கள் என என்ன உறவாக இருந்தாலும் ஓர் அணியாக இணைந்து போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு...
தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிளடி பாலிட்டிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இன்றைய இளைஞர் ஒருவரின் அரசியல்வாதியாகும் ஆசை, முயற்சி, வலியை விவரிக்கிறது இந்த டீசர். சுமார் 1.45 நிமிடங்கள் ஓடும் டீசரின் தொடக்கத்தில் இளையா என்கிற பள்ளி மாணவர் ஒருவர் அரசியல்வாதியாக வேண்டும் என்கிற தன் லட்சித்தை சொல்ல, சக மாணவர்கள் சிரிக்கிறார்கள்.
வாட்ச்மேன் ஒருவரின் மகனான அம்மாணவர் வளர்ந்து...
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படம், அக். 2-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் பங்கேற்றனர்.
ஜேசன் சஞ்சய் பேசும்போது, “எல்லோருக்குமே வாழ்க்கையில் ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும். அதாவது நாம் ஏதாவது ஒரு பெரிய கஷ்டத்தில்...
சூரியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மண்டாடி’ படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தான் பெருமையாக உணர்வதாக பாடலாசிரியரும், இயக்குநரின் மனைவியுமான ஜெயஸ்ரீ மதிமாறன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மண்டாடி’ படம் இன்று (செப்.10) வெளியாகி உள்ளது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் மண்டாடி படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால...









