இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017-ம் ஆண்டு இயக்கி நடித்த படம், ‘மீசைய முறுக்கு’. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்...
தமிழில் கண்ணுக்குள்ளே, சூரன், திலகர் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை அனுமோள். ‘அயலி’ வெப் தொடரில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்ட இவர், தனிமையில் வாழ்வது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றும், சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் காதல் உறவில் இருக்க முயன்றேன். ஆனால் அது வெற்றியடையவில்லை. அதற்காக யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. சில உறவுகள் இயல்பாக நீடிக்காது. அது...
‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது “‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த ஆண்டு அதை விட தகுதியான பல படங்கள் நிறைய இருக்கிறது.
அந்த படங்களின் ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதை நான்...
இந்தியில் 2009-ம் ஆண்டு வெளியான ‘லக்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். இசைக் கலைஞருமான அவர் பாடல்களும் பாடி வருகிறார். தனி ஆல்பங்களும் வெளியிட்டு வருகிறார். நடிகையாக 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்ருதி ஹாசன, அந்தப் பயணம் பற்றி பேசியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப் பயணம் எனக்கு என்னைப் பற்றியும், என்...
காதலை மையப்படுத்தி உருவாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோவாக நடித்து இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும் படத்தில் பணியாற்றியவர்.
சங்கீதா, சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சிமியோன் டெல்பர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கபில் கூறும்போது, “இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது. காதலை...
‘மன்னர் வகையறா’ படத்திற்காக வாங்கிய ரூ.4.5 கோடி கடன் வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, மேல்முறையீட்டைக் கருத்தில் கொண்டு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர்,...
கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத என்டர்டெயினராக இருந்துவந்த விஜய் தனது கடைசித் திரைப்படமாக அறிவித்துவிட்ட இந்தப் படம் அவரது பிரியாவிடைக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.
மதுரை சிறையில்...
மாணவர்கள் போராடுவதற்கான ஒரு இடத்தை அரசே நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: “தமிழகத்தில் போராட்டத்தில்...
யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று இயக்கியுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித...
‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கும் படத்துக்கு ‘ஆகாயம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ‘கன்னி மாடம்’ ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ், கிரி துவாரகிஷ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரகு நந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப்...










