முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’இயக்குநர் முத்தையாவுடன் இணைய இருக்கும் எனது 38-வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும். ஒரு வலிமையான புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது’...
புரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தில் தபு கதாபாத்திரத்தை சொல்லும் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் கிளிம்ப்ஸ், தபுவை அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. படத்தில் அவர் கவுரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில், கெத்து காட்டும் வருமான வரித்துறை அதிகாரியாக வருகிறார்.
கடமையில் கண்டிப்புடன் இருக்கும் அவர், அதிகாரம் செலுத்துபவராகவும், ஆளுமை மிக்கவராகவும் இருக்கிறார்....
‘டேர் டேவில்’ படம் குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்று அதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில், சிறந்த கமர்ஷியல் இயக்குநருக்கான விருது பெற்று பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாருடன் தான் இரண்டாவதாக இணையும் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசும் போது “‘குட் பேட் அக்லி’ படத்துக்கு என்ன விருதுகள் கிடைத்தாலும் அதை நான்...
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் இடம்பெற்றுள்ளார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு தகுதியான பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னையில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினார். இந்த விபத்து குறித்து அவரது சகோதரி கதீஜா விளக்கம் அளித்துள்ளார்.
கிண்டி ஒலிம்பியா சிக்னல் அருகே இன்று அதிகாலை 3:30 மணியளவில் அமீன் தனது நண்பருடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, பக்கவாட்டு சாலையிலிருந்து வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அமீன் மற்றும் அவரது நண்பருக்கு லேசான காயங்கள்...
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'கட்டா குஸ்தி', ‘கட்டா குஸ்தி 2’ படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் செல்லா அய்யாவு. இவர் அடுத்து கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், 'கட்டா குஸ்தி -3’ உருவாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: 'கட்டா குஸ்தி’-க்கு கிடைத்த வரவேற்புதான் அந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகக் காரணம். பொதுவாகவே...
“ஒரு பெரும் அன்பை, பேரன்பைச் சொல்ல வரும் படம்தான் ‘ஆகாயம்’. அன்புக்கு முன்னால இங்க எதுவுமே இல்லை. அளவில்லா அன்பைச் சொல்ற கதைங்கறதாலதான் ‘ஆகாயம்’னு தலைப்பு வச்சோம்” என்று ஆரம்பிக்கிறார் இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ். ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா மிராணி நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்னர். படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ரிலீஸ் வேலைகளில் இருந்த ‘தினந்தோறும்’...
‘மீசைய முறுக்கு 2’ பட விழாவில் கடும் நெரிசல்: ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய ஹிப்ஹாப் ஆதி – பின்னணி என்ன?
admin - 0
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 8) கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி திட்டமிட்டபடி வணிக வளாகத்துக்கு வந்தடைந்தார். எனினும், அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், அவரால் மேடையை நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டது. கூட்டம்...
ஒரு திரைப்படத்துக்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே ஆளாகச் செய்து ‘ஒன் மேன்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். இப்படம் ஆக. 21-ல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இது பற்றி சங்ககிரி ராஜ்குமார் கூறும்போது, “இதில் இடம்பெற்றுள்ள அத்தனை கதாபாத்திரங்களிலும் நானே நடித்திருக்கிறேன். படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனி கதாபாத்திரங்களாகவே தோன்றுவார்கள். இவனிடம் இருந்து...
இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள திரைப்படம், ‘செய்! செய்யாதே!’. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் கலிபோர்னியாவில் வசிக்கும் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இந்தப் படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இதில் பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தமிழக முதல்வராக சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாக்டர் எஸ். ராஜா, குரு விஜய், தர்ஷினி ரெட்டி, பிரதிக் ஷா மனோ பிரசாந்த், சிதம்பரம், மவுனிகா...










